Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாஉனக்கு 50, எனக்கு 57! சந்தோசமா இருங்க! 2வது திருமணம் செய்தது ஏன்? ஆஷிஸ் வித்யார்த்தி...

உனக்கு 50, எனக்கு 57! சந்தோசமா இருங்க! 2வது திருமணம் செய்தது ஏன்? ஆஷிஸ் வித்யார்த்தி விளக்கம்

பிரபல வில்லன் நடிகர் ஆசிஸ் வித்யாஸ்ரீ , தம் இரண்டாவது திருமணம் செய்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆசிஸ் வித்தியார்த்தி நாம் அனைவருடைய வாழ்க்கையும் வித்தியாசமானவை.

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள், மதம்,கடவுள் நம்பிக்கை என முற்றிலும் மாறுபட்டு இருப்போம். ஆனால் வாழ்க்கையின் அடிப்படை விஷயமே நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான்.

என்னுடைய முதல் மனைவியுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் அழகானது. ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாங்கள் பெரிய நேரிட்டது. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான். எனினும் அந்த கருத்து வேறுபாட்டை ஒருவர் இன்னொருவர் மீது திணிக்க விரும்பவில்லை.

- Advertisement -

அப்படி செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற குறிக்கோளே அழிந்துவிடும். இதனால் நாங்கள் இருவரும் பேசி சுமுகமாக பிரிந்தோம். இந்த நிலையில் தான் என்னுடைய இரண்டாவது மனைவி ரூபாலியை நான் சந்தித்தேன்.

- Advertisement -

ரூபாலி நானும் முதலில் பேசத் தொடங்கியதில் இருந்தே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். என் மீது அவரும் அவர் மீது நானும் ஈர்க்கப்பட்டோம். இருப்போம் நிறைய பேசினோம்.நல்ல நண்பர்களாக இருந்தோம்.அதன் பிறகு எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக செலவிட ரூபாலி எனக்கு சிறந்த துணையாக தெரிந்தார்.

இதனால்தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நான் என் முதல் மனைவியை பிரிந்த போது எனக்கு 55 வயதாக இருந்தது. இதனால் நான் எஞ்சிய வாழ்க்கையை தனியாக வாழ விரும்பவில்லை.

அது என்னால் முடியாது. இதனால் தான் மகிழ்ச்சியாக வாழ்நாளை கழிக்க வேண்டும் என்பதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். மற்றவர்களின் வாழ்க்கை முடிவுகளை நாம் மதிக்க வேண்டும் என்று ஆசிஸ்வித்யார்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

தமக்கு வயது 60 ஆகவில்லை 57 தான் ஆகிறது .எனினும் எந்த வயதாக இருந்தாலும் திருமணம் செய்வதற்கு தடை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆசிஸ் வித்யார்த்திக்கும் முதல் மனைவிக்கும் 23 வயதில் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular