சினிமா

பிரபல நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60 வயதில் 2வது திருமணம்

பாலிவுட்டில் குணச்சித்திர நடிகராக அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி, தமிழில் தில் படத்தின் மூலம் பிரபலமடைந்தார். முதல் படத்திலேயே மாஸ் வில்லனாக நடித்ததால் தமிழில் அடுத்தடுத்த படங்களில் வில்லனாக நடித்தார்.

Advertisement

ரஜினிக்கு வில்லனாக பாபா, அர்ஜுனுக்கு வில்லனாக ஏழுமலை, விஜய்க்கு வில்லனாக பகவதி போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், ஒரு சில படங்களில் தந்தை, சித்தப்பா போன்ற குணச்சித்திர வேடத்திலும் இவர் நடித்துள்ளார். அதேபோல குணச்சித்திர கதாபாத்திரத்திற்கும் இவர் பெயர் பெற்றவர்.

நடிகர் விஜய்க்கு அப்பாவாக கில்லி திரைப்படத்தில் நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அண்மையில் இவர் பெரிதாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இருந்தாலும் மற்ற மொழி படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.

Advertisement

இவருக்கு ஏற்கனவே ரஜோஷி என்பவருடன் திருமணம் நடந்து ஒரு மகள் இருக்கிறார். இதற்கிடையே முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியே வசித்து வந்தார்.

இந்த நிலையில் ரூபாலி பருவ என்ற பெண்ணை ஆஷிஷ் வித்யார்த்தி தற்போது திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top