Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஎன் படத்தைக் காப்பி என்று கூறியவர்களின் நிலை என்னாச்சு தெரியுமா?… புட்டு புட்டு வைத்த அட்லி…...

என் படத்தைக் காப்பி என்று கூறியவர்களின் நிலை என்னாச்சு தெரியுமா?… புட்டு புட்டு வைத்த அட்லி… புரியாமல் தவிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நான்கே நான்கு திரைப்படங்கள் கொடுத்து, நங்கூரமாய் அச்சாரமிட்டு புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் அட்லி. தளபதி விஜய் உடன் மூன்று வெற்றி படங்களை கொடுத்த அட்லி, தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் ஆச்சரியத்துடன் பார்க்கும் அளவுக்கு முன்னேறினார். ஆரம்பத்தில் சில குறும் படங்களை இயக்கி வந்த அவர், அங்கிருந்து இயக்குனர் சங்கருக்கு உதவியாளராக சேர்ந்தார்.

- Advertisement -

எந்திரன், நண்பன் திரைப்படங்களில் பணியாற்றிய அவர், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அந்தஸ்து பெற்றார். கோலிவுட் சினிமாவில் பழக்கப்பட்ட கதையாக இது எடுக்கப்பட்டிருந்தாலும், அந்தப் படத்தை சொன்ன விதத்தில் பலரையும் சபாஷ் போட வைத்தார் அட்லி.

குறிப்பாக அவர் திரைக்கதையை சுவாரசியமாக நகர்த்திய விதம், பலருக்கும் பிடித்துப் போனது. இதனால் ராஜா ராணி திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறியது. இதன் பிறகு, நடிகர் விஜய்யை வைத்து தெறி எனும் அட்டகாசமான படத்தை கொடுத்தார் அட்லி.

- Advertisement -

தொடர்ந்து மெர்சல், பிறகு பிகில் என அட்லி சிங்கப் பாதையில் வலம் வந்தார். தற்போது, பாலிவுட் உச்ச நட்சத்திரம் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை அவர் இயக்கியுள்ளார். நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

அதிலும் அட்லி முதல்முறையாக பாலிவுட்டிற்கு சென்றுள்ளதால் பலரது பார்வையும் இயக்குனர் மீது விழுந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, அட்லி தொடர்ந்து பிற படங்களை காப்பி செய்து இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

ராஜா ராணி திரைப்படம், மௌன ராகத்தின் சாயல் என்றும், தெறி திரைப்படம் சத்ரியன் படத்தின் இன்னொரு பாகம் என்றும் பலர் கூறினர். இதே போல் மெர்சல் திரைப்படமும், அபூர்வ சகோதரர்களை அப்பட்டமாக காப்பியடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளானார் அட்லி. இந்த நிலையில் சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர், இது குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது,

“சிலர் மூன்று முகம் திரைப்படத்தின் காப்பி தான் மெர்சல் என்று கூறினர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தபோது, புகார் கொடுத்த தயாரிப்பாளரே அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. இன்னொருவர் பிகில் திரைப்படத்தின் கதையை தன்னுடையது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

நான் வழக்கு தொடுத்தவரின் எதிர்காலத்தை எண்ணியே வருத்தப்பட்டேன். இயக்குனர் சங்கம், பிகில் திரைப்படம் எனது சொந்தக் கதை என்று கூறியது. நான் அடிக்கடி நீதிமன்றங்களுக்கு சென்று இருக்கிறேன். ஆனால் அத்தனை வழக்குகளிலும் நானே வெற்றி பெற்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். அட்லியின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular