Monday, October 7, 2024
- Advertisement -
Homeசினிமாஜவான் திரைப்பட வெற்றிக்கு தளபதி விஜய்க்கு நன்றி கூறிய அட்லி ... காரணம் என்ன..?

ஜவான் திரைப்பட வெற்றிக்கு தளபதி விஜய்க்கு நன்றி கூறிய அட்லி … காரணம் என்ன..?

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கமர்சியல் டைரக்டர் என்ற பெயர் பெற்றவர் இயக்குனர் அட்லி இவர் முதலில் இயக்கிய ராஜா ராணி திரைப்படத்திற்கு இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

- Advertisement -

இரண்டு விதமான காதல் கதைகளையும் கச்சிதமாக காட்சியாக்கி ரசிகர்களுக்கு படமாக சமர்ப்பித்தார் இயக்குனர் அட்லி. அதிலிருந்து அவர் சினிமா பயணம் துவங்கியது. பிறகு தளபதி விஜய் வைத்து தெறி ,பிகில் ,மெர்சல் என்று மூன்று திரைப்படங்களை இயக்கி வெற்றியை குவித்தார் .மூன்று திரைப்படங்களில் ஒன்றாக பயணித்ததால் தளபதி விஜய்க்கு இயக்குனர் அட்லிக்கும் இடையில் அண்ணன் ,தம்பி போல் பந்தம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் அட்லீத் தளபதியை அண்ணன் என்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு பெயரெடுத்த அட்லி தற்பொழுது பாலிவுட் சினிமாவை கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வைத்து ஹிந்தியில் ஜவான் என்ற முதல் திரைப்படத்தை இயக்கினார் .இந்த திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை பெற்று அசாதாரண வெற்றி அடைந்தது.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் கதை பின்னணி எவ்வாறு இருந்தாலும் நிச்சயமாக இந்த வெற்றிக்கு அட்லியை பாராட்டியே ஆக வேண்டும் என்பதுதான் பலரின் கருத்தாக இருந்தது. தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று முதல் திரைப்படத்திலேயே இப்படி ஒரு வெற்றியைப் பெற்ற புகழுக்கு உரியவர் இயக்குனர் அட்லி.

- Advertisement -

தற்பொழுது இந்த ஜவான்  திரைப்படத்திற்கு தாதா சாகோ பால்கோ சர்வதேச விழாவில் தாதா சாகோ பல்கோ என்ற விருதுகளை பல பிரிவுகளில் இந்த திரைப்படம் வென்று இருக்கிறது. சிறந்த நடிகருக்காக நடிகர் ஷாருகான், சிறந்த நடிகைக்காக நடிகை நயன்தாரா, சிறந்த இயக்குனருக்காக இயக்குனர் அட்லி, சிறந்த இசைக்காக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் என்று பல்வேறு பிரிவுகளில் விருதுகளை ஜவான் திரைப்படம் வென்று இருக்கிறது.

இந்த நிலையில் இந்த விருது பெற்ற பிறகு இயக்குனர் அட்லி மேடையில் பேசியது தற்பொழுது வைரலாகி இருக்கிறது. தமிழுக்கு நன்றி தமிழ் ரசிகர்களுக்கும் என்று கூறிவிட்டு ஜவான் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருப்பதால்  இந்தியா முழுவதும் இருக்கும் ரசிகர்கள் என்று கூட சொல்லலாம் என்றார். தன்னுடைய முதல் படம் ராஜா ராணி ஆக இருந்தாலும் அதற்குப் பிறகு தனக்கு வாய்ப்பு கொடுத்து தன்னை அடையாளம் காண்பித்த தனது அண்ணன் தளபதி விஜய்க்கு நன்றி கூறினார்.

மேலும் இந்த விருதினை ஜவான் பட குழுவினர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் அறிவித்தார் இயக்குனர் அட்லி.

Most Popular