Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாஅவதார் 2 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் பார்க்கலாம்

அவதார் 2 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் பார்க்கலாம்

- Advertisement -

பிரபல ஹாலிவுட் திரைப்படமான அவதார் 2 இந்தியாவில் சக்கை போடு போட்டது. இந்தியாவில் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களிலே அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை அவதார் 2 பெற்றது. இந்தியாவில் மட்டும் 350 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது.

ஒட்டுமொத்தமாக உலக அளவில் இரண்டு பில்லியன் வசூல் சாதனை படைத்திருக்கிறது. எனினும் இது முதல் பாகத்தின் வசூலை முறியடிக்காதது  இயக்குனர் ஜேம்ஸ் கேமரானை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

கொரோனா காலத்திற்குப் பிறகு வெளியான திரைப்படம் என்பதால் வசூலில் குறைந்து இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அவதார் 2 திரைப்படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 28ஆம் தேதி நாளை அவதார் 2 திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஆப்பிள் டிவியில் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

எனினும் இதனை அமேசான் சப்ஸ்கிரைப் செய்தவர்கள் மட்டும் பார்க்க முடியாது. இந்த படத்தை பார்க்க தனியாக காசு கட்ட வேண்டும். இது ரசிகர்கள் மத்தியில் கடுப்படையச் செய்துள்ளது. ஒவ்வொரு புதிய படத்திற்கும் இதுபோல் தனியாக காசு கட்ட வேண்டும் என கூறுவதால் அப்போது எதற்கு சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதை போன்று டிஸ்னி ஹாட் ஸ்டார், ஆப்பிள் அவதார் 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது .அதனை ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரைப் செய்தாலே நாம் அவதார் 2 படத்தை பார்க்கலாம். எனினும் அது மார்ச் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. எனினும் அவதார் 2 அமேசானில் ரிலீஸ் ஆனாலே கள்ளச் சந்தையில் வந்துவிடும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Popular