Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஅயலான் - கேப்டன் மில்லர் மோதலில் முன்னிலையில் இருப்பது எது ? இரண்டாம் நாள் வசூல்...

அயலான் – கேப்டன் மில்லர் மோதலில் முன்னிலையில் இருப்பது எது ? இரண்டாம் நாள் வசூல் விவரம்.. !

பொங்கலுக்கு தமிழில் வெளியாகிய நான்கு படங்களில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் இரு படத்திற்கு இடையே தான் பெரிய எதிர்பார்ப்பு. தனுஷ் vs சிவகார்த்திகேயன் என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் சண்டை ஒரு பக்கம். மறுபக்கம் இரு படங்களும் எதிர்பார்த்ததை பாக்ஸ் ஆபிஸில் நிகழ்த்தி வருகின்றன.

- Advertisement -

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் அயலான், ஏலியன் – காமெடி களத்தைக் கொண்டது. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமைந்துள்ளது.

தனுஷ் – அருண் மாத்தீஸ்வரன் காம்போவில் வெளியாகியுள்ளது கேப்டன் மில்லர் திரைப்படம் ஓர் வரலாற்று கதை. 1940களில் ஆங்கிலேயர் – இந்திய ராஜாக்கள் – ஒடுக்கப்பட்ட மக்கள் மூவருக்கும் இடையே நடக்கும் போர் தான் படம். தாறுமாறான ஆக்க்ஷன் காட்சிகள் மற்றும் இசையில் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

- Advertisement -

இரு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூலிலும் நன்றாக செயல்பட்டாலும் இந்த மோதலில் முன்னிலையில் இருப்பது ஒரு படமாக தானே இருக்கும். அது, தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் தான். இரு தினங்களில் அயலான் படத்தை விட சற்றே அதிகம் வசூல் செய்துள்ளது.

- Advertisement -

இரண்டு தினங்களில் கேப்டன் மில்லர் 23 கோடியும் அயலான் திரைப்படம் 20 கோடியும் அள்ளியுள்ளது. இந்த தரவரிசை அடுத்த சில நாட்களில் மாற அதிக வாய்ப்புள்ளது. குடும்பங்கள் ரசித்து மகிழ்ந்து பார்கும் படமான அயலான் அடுத்த 4 நாட்கள் விடுமுறையில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

பொங்கலுக்கு வெளியான மற்ற இரண்டு படங்கள், மேரி கிறிஸ்மஸ் மற்றும் மிஷன் ஆகும். இரு படங்களுக்கும் பெரிய அளவில் ஸ்கிரீன்கள் கிடைக்கவில்லை. இதில் விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ் விமர்சன ரீதியாக மிகச் சிறந்த வார்த்தைகளைப் பெற்றுள்ளது. அருண் விஜய்யின் மிஷன் திரைப்படம் சுமாராக தான் உள்ளது.

Most Popular