Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஅயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் வெளியாவதில் சிக்கல்.. பொங்கல் கழித்து ஒத்திவைப்பு.. !

அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் வெளியாவதில் சிக்கல்.. பொங்கல் கழித்து ஒத்திவைப்பு.. !

கோலிவுட்டில் 2024ம் ஆண்டின் முதல் பெரிய மோதலில் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் பங்கேற்கிறது. வருகிறது பொங்கலுக்கு இருப் படங்களும் வெளியாகவுள்ளது. ஆனால் ஆந்திராவில் மட்டும் வெளியாகது என செய்திகள் வந்துள்ளன.

- Advertisement -

கொரோனா காலத்திற்கு பிறகு வரும் படங்கள் பெரும்பாலாக பேன் இந்தியா படங்களாக வெளியாகி நல்ல லாபம் பார்க்கத் துவங்கியுள்ளது. மக்களும் அதற்க்கு நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர். இதில் சின்ன பிரச்சனை என்னவென்றால் அதிகமான படங்கள் ஒரே சமயத்தில் வந்தால், தியேட்டர் ஸ்கிரீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

அயலான் மற்றும் கேப்டன் மில்லர் வெளியாகும் போது ஆந்திராவில் மூன்று பெரிய படங்கள் வருவதால் அவர்கள்து மொழிப் படங்களுக்கு தான் ஆந்திரா திரையரங்குகள் முக்கியத்துவம் அளிக்கும் எனக் கூறியுள்ளனர். தியேட்டர் ஸ்கிரீன் பற்றாக்குறை காரணமாகவே இச்சிக்கல்.

- Advertisement -

பொங்கலுக்கு தெலுங்குவில் மகேஷ் பாபுவின் குண்டூர்காரம், ரவி தேஜாவின் ஈகில் மற்றும் சூப்பர் ஹீரோ படம் ஹனுமான் வெளியாகிறது. இந்த மூன்றுமே பெரிய படங்கள் என்பதால் அயலான் மற்றும் கேப்டன் மில்லரை ஆந்திராவில் மட்டும் தள்ளி வைக்கவுள்ளனர்.

- Advertisement -

கேப்டன் மில்லர் திரைப்படம் ஆந்திராவில் பொங்கல் கழித்து வெளியாகும் என அந்த தயாரிப்பாளர்களே உறுதி செய்துள்ளனர். மறுபக்கம் அயலான் படத்தின் விநியோகிஸ்தர்கள் எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ள செய்தியின் படி இரண்டு படமுமே தள்ளிப் போகவுள்ளது.

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் ஏலியன் கதையை மையமாகக் கொண்டது. அருண் மாதீஸ்வரன் – தனுஷ் காம்போவில் வரும் கேப்டன் மில்லர் வரலாற்று போர் படம் ஆகும். இரண்டு படங்களுமே நல்ல கன்டன்ட் படங்கள் என்பதால் மோதலில் வெளியானால் லாபத்தில் அடி வாங்கும். இதனைக் கருதியும் தள்ளி வைப்பர்.

Most Popular