சிவகார்த்திகேயன் – ரவிகுமார் இயக்கத்தில் ஏலியன் கதைக்களத்தைக் கொண்ட படமான அயலான் இந்தப் பொங்கலுக்கு உலகெங்கும் வெளியானது. திரைப்படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கதாநாயகன் சிவகார்த்திகேயனுடன் ரகுல் பரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, இஷா, ஷரத் கெல்கார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஏலியனாக வந்த அனைவரையும் கலக்கியவர் புது நடிகர் வெங்கட் செங்குட்டுவன் ஆவார், அவருக்கு (எலியனுக்கு) டப்பிங் செய்தவர் சித்தார்த்.
படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க காமெடி தான். இரண்டாம் பாதியில் ஆக்க்ஷன் கலந்து மொத்தத்தில் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. படம், எதிர்பார்த்த ஆடியன்ஸை முழுமையாக திருப்தி செய்தது. ஆனால் மற்ற சில பார்வையாளர்களை கவரவில்லை எனும் விமர்சனங்களும் உண்டு.
வசூல் ரீதியாக படம் இதுவரை 6 நாட்களில் 64 கோடிகளை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 44 கோடிகள். படத்தின் வெற்றியை அடுத்து இந்தப் படத்தின் அடுத்தப் பாகத்தைக் குறித்து பேசியுள்ளது படக்குழு . படத்தின் வரவேற்பை பொறுத்து இரண்டாம் பாகத்திற்கான முடிவுகள் எடுக்கப்படும் என முன்னரே கூறினர்.
இன்று சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ரவிகுமார் இருவரும் அடுத்தப் பாகம் இருப்பது உறுதி செய்துள்ளனர். இந்தப் படத்திற்காக இத்தனை ஆண்டுகள் வேறு எந்த படமும் செய்யாமல் இருந்ததாகவும், இந்தப் படத்தின் விமர்சனத்தை வைத்தே அடுத்து என்ன செய்யலாம் என முடிவு செய்ய வேண்டும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அயலான் திரைப்படம் துவங்கி 7 ஆண்டுகள் மேல் இருக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் பட்ஜெட் சிக்கல்களால் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இறுதியாக இந்த பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பலனாக, படம் பார்த்த அனைவரும் கிராபிக்ஸை பாராட்டியுள்ளனர்.
இங்கிருந்து இரண்டாம் பாகம் அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வா வந்தாலும் கூட, அது துவங்கி வெய்யாக பல ஆண்டுகள் ஆகிவிடும். நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இரண்டு பெரிய படங்களுடன் அடுத்தக் கட்டத்திற்கு சென்று வருகிறார். படத்தின் வெற்றியை வைத்து அவர்கள் அயலான் பார்ட் – 2 இருக்கிறது என இப்போது சொன்னால் கூட அது நிகழ குறைந்த வாய்ப்புகளே உள்ளது.