இன்று நேற்று நாளை எனும் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் மூலம் பெரிய வரவேற்பை பெற்ற இயக்குனர் ரவிகுமார். தன் அடுத்த படத்தையும் அதே வகையில் உருவாக்க திட்டமிட்டு 2 – 3 ஆண்டுகளாக அதிலேயே பணிபுரிந்து வருகிறார். ‘ அயலான் ’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், கருணாகரன், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்பு வந்த பின் சிவகார்த்திகேயன் டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன், படம் என அடுத்தடுத்து 4 படங்களில் நடித்துவிட்டார். அதன் பின் தற்போது கமலின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடிக்கவும் விரைவில் துவங்கவுள்ளார். ஒரு பக்கம் அயலான் அப்படியே இருக்க மறுபக்கம் படங்களாக நடித்து தல்லிக்க கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ரசிகர்களும் எப்போது தான் அயலான் அப்டேட் என்ற தீவிரமான எதிர்பார்ப்பில் கிடந்தனர்.
24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜா நீண்ட இடைவேளைக்குப் பின் மவுனம் களைத்துள்ளார். நாளை காலை (ஏப்ரல் 24) 11:04 மணிக்கு அப்டேட் வரும் என இன்று மாலை போஸ்டர் வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தின் ரீலீஸ் தேதி குறித்த அறிவிப்பு என் பலர் எண்ணுகின்றனர். ஆனால் எதைப் பற்றி என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
அயலான் சாதனை
செய்தியாளர் சந்திப்பில் தயாரிப்பாளார் படத்தின் தாமதிப்பைப் பற்றி தெளிவாக விவரித்தார். அவர் கூறியதாவது, “ அயலான் பேன் இந்தியா படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் மொத்தம் 4500க்கும் மேற்ப்பட்ட சி.ஜி.ஐ ஷாட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் அதிக கிராபிக்ஸ் ஷாட்கள் கொண்ட படம் என்ற சாதனையை அயலான் பெற்றுள்ளது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ததால் தான் இவ்வளவு தாமதம். ” என்றார்.
அதோடு படத்தில் வரும் ஏலியன் முக்கிய கதாபாத்திரம் கொண்டது எனவும் படம் முழுக்க வரும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ஏலியனுடன் இணைந்து சிவகார்த்திகேயன் செய்யும் குறும்பு மற்றும் நகைச்சுவை காட்சிகள மக்களை நிச்சயம் திருப்தி படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.