Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாஅயலான் vs கேப்டன் மில்லர்.. முதல் நாள் வசூல் எது அதிகம்?

அயலான் vs கேப்டன் மில்லர்.. முதல் நாள் வசூல் எது அதிகம்?

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வந்தாலே ரேஸ்கள் தொடங்கி விடும். அதில் அதிக எதிர்பார்ப்பில் இருப்பது சினிமா ரேஸ் தான் . இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி அது எது வெற்றியடைகிறது என்று ரேஸ் வைப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆர்வம் உண்டு.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பொங்கல் ரேசில் களம் இறங்கி இருக்கிறார்கள். தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேற்று ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அயலான் திரைப்படம் 2018 இல் இருந்தே தொடங்கி தற்பொழுது 2024 வெளியிடப்பட்டு இருக்கிறது. ஏறத்தாழ ஆறு ஏழு வருட எதிர்பார்ப்பு என்றே சொல்லலாம். இது முற்றிலும் சயின்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக இருக்கிறது.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தில் டெக்னிக்கல் டீம் வேலை மிக அழகாக அமைந்திருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் கிராபிக்ஸ்ளை போல் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அதேபோல் இது முற்றிலும் குடும்பங்கள் கொண்டாட கூடிய திரைப்படமாகவும் அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்கும் இருந்து வருகிறது. ஆனால் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட முதல் நாள் ஆகிய அனைத்து இதுவரை ஐந்து கோடிகள் மட்டுமே வசூல் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போல் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் முற்றிலும் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் உடைய ஆக்சன் காட்சிகளால் திரைப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைக்க இருந்தது என்ற தகவலும் முதலில் வெளிவந்தது.

சில மாற்றங்கள் செய்து யு ஏ சர்டிபிகேட்டை கடைசியில் கேப்டன் மில்லர் திரைப்படம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இப்படி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் நடிகர் தனுஷ்காகவே எடுக்கப்பட்டது போல் தோன்றுகிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடப்பது போல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அதிகமான சண்டை காட்சிகள் தரமான முறையில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்ட முதல் நாளாகிய நேற்று இருந்து இன்று வரை 10 கோடி வரை வசூல் ஆகி இருப்பதாகவும் கூடப்படுகிறது.

முதல் நாள் வசூலில் பாக்ஸ் ஆபிஸை பொருத்தவரை நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் தான் இந்த ரேஸில் முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் வரக்கூடிய நாட்கள் முழுமையான வெற்றி அடையப்போறது அப்புறம் எது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Most Popular