Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமா2 வாரங்கள் ஆகியும் இன்னும் பட்ஜெட் பணத்தைக் கூட வசூல் செய்யாத அயலான்.. கேப்டன் மில்லரிடம்...

2 வாரங்கள் ஆகியும் இன்னும் பட்ஜெட் பணத்தைக் கூட வசூல் செய்யாத அயலான்.. கேப்டன் மில்லரிடம் தோல்வி.. !

சிவகார்த்திகேயன் – ரவிகுமார் காம்போவில் உருவான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான அயலான் பொங்கலுக்கு முன் வெளியானது. படம் எதிர்பார்த்தது போல குழந்தைகளை குஷிப்படுத்தியது, ஆனால் மொத்தத்தில் கலவையான விமர்சனங்களையேப் பெற்றது.

- Advertisement -

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, சரத் கேல்கர், இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பணிகளை மேற்கொண்டார். 6 – 7 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் ஒருவழியாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் வெளியானது.

பூமிக்கு வரும் ஏலியனின் கருவியை வைத்து ஒரு கார்பரேட் நிறுவனம் வியாபாரம் செய்ய நினைக்க, அதைத் தடுத்து மீண்டும் எலியனை சொந்த கிரகத்திற்கு அனுப்ப சிவகார்த்திகேயன் கேங் & ஏலியன் செய்யும் முயற்சிகள் தான் படமே. நல்ல கலகலப்பாக படத்தைக் கொண்டு போயிருந்தனர்.

- Advertisement -

அயலான் திரைப்படம் தயாராக அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்கு மிக முக்கியக் காரணம் வி.எஃப்.எக்ஸ் பணிகள் தான். வெளிநாட்டு நிறுவனத்தின் தரமான வேலைப்பாடு நல்லப் பலனைக் கொடுத்துள்ளது. என்னதான் படம் சுமாரான விமர்சனங்களைப் பெற்றாலும் எடிட்டிங் மிகச் சிறந்த வார்த்தைகளைப் பெற்று படத்தைக் காப்பாற்றியது.

- Advertisement -

வசூலில் நேற்றுடன் 75 கோடியை எட்டியது அயலான். படத்தின் மொத்த பட்ஜெட் 80 கோடிக்கு அருகில். அடுத்து நான்கு நாட்கள் விடுமுறையில் புதுப் படங்கள் 4 வருவதால் அயலான் படத்திற்கு முன்னது போல் ஸ்கிரீன்கள் கிடைக்காது, அது வசூலில் வேகத்தைக் குறைக்கும்.

இதுவரை வசூலான் பணம் செலவு செய்ததற்கு சரியாகக் போனது. இன்னும் லாபதின் பாதியில் பெரிதாக ஒன்றும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. சிவகார்த்திகேயனின் கேரியரில் இதற்கு முன்பு மாவீரன் 75+ கோடிகள் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் அயலானுடன் மோதிய தனுஷின் கேப்டன் மில்லர் வசூலில் அயலானை சுலபமாக வென்றுள்ளது. கேப்டன் மில்லரின் வசூல் 100 கோடியை அடித்து 2024ஆம் ஆண்டின் முதல் 100 கொடிப் படமாக அமைந்துள்ளது.

Most Popular