இளைய தளபதி விஜய்யுடன் ஒரே ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மோதவிருக்கிரார் பாலகிருஷ்ணா.
லோகேஷ் கனகராஜ் தலைமையில் விஜய், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மடோனா செபாஸ்டின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஓர் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கும் திரைப்படம் லியோ. இந்த வருடத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்ற படங்களில் முன்னிலை வகிப்பது இது தான்.
இந்தப் படத்துடன் பாலகிருஷ்ணா தன் அடுத்த தெலுங்கு படத்தை வைத்து மோதுகிறார். அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் ‘ பகவத் கேசரி ’ படத்தில் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், பிரியங்கா ஜவாக்கர், ஶ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அக்டோபர் 19 மோதல்
விஜய்யின் லியோ திரைப்படம் ஷூட்டிங்க்கு முன்னரே அக்டோபர் 19ஆம் தேதி என ரீலீஸ் தேதியை அறிவித்து ஆயுத பூஜை விடுமுறையை லாக் செய்துவிட்டது. பெரும்பாலும் எந்த பெரிய தமிழ் படமும் லியோவுடன் மோதாது.
பாலகிருஷ்ணா இதே வருடம் இரண்டாவது முறை விஜய்யுடன் மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஜனவரி மாதம் வாரிசு – துணிவு போட்டியின் போதும் மோதினார். தற்போது அடுத்த படத்திலும் நேருக்கு நேர் !
யார் இந்த மோதலில் வெல்வார் ?
கடந்த முறை விஜய்யின் வாரிசு திரைப்படம் எப்போதும் போல நல்ல வசூலை பெற்றது. தமிழ் – தெலுங்கு எனும் இருமோழிப் படமென்பதால் தெலுங்குவிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் பாலகிருஷ்ணா வாரிசு படத்திற்கு நல்ல டஃப் கொடுத்தார் என்றே கூறலாம். ரசிகர்கள் அவரின் வீர சிம்ஹா ரெடி படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினர்.
இம்முறையும் அதே தான் நடக்கும் எனத் தெரிகிறது. பாலகிருஷ்ணாவின் பகவத் கேசரி படம் சிறப்பாக அமைந்தால் தெலுங்கு ரசிகர்களுக்கு மத்தியில் லியோவை விட நல்ல வசூலை பெற வாய்ப்பிருக்கிறதே தவிர உலகளவில் நிச்சயம் விஜய்யின் லியோ படம் தான் வெல்லும். அதற்கு கியாரண்ட்டி.