சினிமா

பிக் பாஸ் நட்சத்திரத்துக்கு கிடைத்த லக்.. இளைய தனுஷாக நடிக்கிறாரா?

தமிழ் சினிமாவில் தன் எதார்த்தமான நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்ட தனுஷ் தற்போது கோலிவுட்டில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் டோலிவுட் என்று உலகம் எங்கும் ரசிகர்களைக் கொண்டு திரை உலகின் சிறந்த நாயகனாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

ஹாலிவுட்டில் அவெஞ்சர் எண்டு கேம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடித்த த கிரேமன் திரைப்படம் அடைந்த வெற்றியைக் கொண்டு தி கிரேமன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்பொழுது தயாரிக்க உள்ளதாகவும் அதில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இதை தவிர, தெலுங்கில் ராங் டே, தோழி பிரேமா போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்பொழுது தனுஷ் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. பொதுவாக வெங்கி அட்லூரி இயக்கிய திரைப்படங்கள் ரொமான்டிக்கான கதைக்களத்தை கொண்டதாக இருக்கும்.ஆனால் தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அசுரன், ஆடுகளம் போன்ற தனுஷ் நடித்த படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் தான் தற்பொழுது வாத்தி படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இதனால் இந்தப் படத்தை இசையும் வெற்றி பெறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சம்யுக்தா மேனன் என்ற மலையாள நடிகை தான் தனுஷிற்கு கதாநாயகியாக நடிக்கின்றார்.இவர் இதற்கு முன்பும் தமிழில் சில படங்கள் நடித்து இருக்கிறார்.ஆனால் தனுசு உடன் நடிக்கும் வாத்தி திரைப்படம் அவருக்கு தமிழிலும் ரசிகர்களை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அடுத்து தனுஷின் சகோதரர் ஆகிய இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தானும் தயாரித்து வருகிறார். தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களில் பாடல்களைக் கொண்டு ரசிகர்கள் மனதை வென்று இசையிலும் வெற்றி பெற செய்த யுவன் சங்கர் ராஜா தான் தற்பொழுது நானே வருவேன் திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். நானே வருவேன் திரைப்படத்தின் இசையமைப்பும் ஏறத்தாழ நிறைவு பகுதியை அடைந்தது.

இதில் செல்வராகவன் இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவும் நடித்து வருகிறார். இவர்களோடு இணைந்து பிரபு யோகி பாபு என்று பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர். இவர்களோடு இணைந்து தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் மற்றும் சூப்பர் சிங்கரில் பிரபலமான ஆஜித் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.

ஆஜித் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இயக்குனர் செல்வராகவனோடு இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தில் நானே வருவேன் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளும் நிறைவடைந்தது என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது தனுஷ் ரசிகர்களின் பார்வை அனைத்தும் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 18 தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top