Monday, November 4, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்யால் கார்த்திக்கிற்கும், ராகவா லாரன்ஸ்க்கும் உருவான பிரச்சினை? என்ன மா இப்படி பண்றீங்க?

விஜய்யால் கார்த்திக்கிற்கும், ராகவா லாரன்ஸ்க்கும் உருவான பிரச்சினை? என்ன மா இப்படி பண்றீங்க?

நடிகர் விஜய் ஆல் கார்த்தி,ராகவா லாரன்ஸ்க்கும் மிகப்பெரிய சிக்கல் ஒன்று உருவாகி இருப்பதாக தமிழ் திரைப்படத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு ஆண்டில் தமிழ் சினிமாவில் தற்போது அதிக வசூலை குவித்துள்ள திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்று இருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்பு ஜெய்லர் இந்த சாதனையை படைத்திருந்தது.
இந்த நிலையில் தீபாவளிக்கு நடிகர் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படமும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து கலக்கி உள்ள ஜிகர்தண்டா 2 படமும் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த இரண்டு திரைப்படத்திற்கும் போதிய திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் லியோ திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

மேலும் தீபாவளி வாரத்திலும் லியோ தமிழகத்தில் 200 திரையரங்குகளுக்கு மேல் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீபாவளி வாரத்தில் லியோ திரைப்படம் திரையிடப்பட்டால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் வகையில் வருமான ஒப்பந்த பங்கிட்டு  செய்யப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதனால் லியோ திரைப்படத்தை தீபாவளி அன்று ஓட்டினால் பெரிய நடிகர் திரைப்படம் என்பதாலும் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் பெருமளவில் லியோ படத்தைக் காண திரையரங்குகளுக்கு வருவார்கள்.

இதனால் பெரிய திரையரங்குகள் லியோ திரைப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படத்திற்கும் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா 2 திரைப்படங்களில் வசூலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடியதால் அப்போது ரிலீசான பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படங்களுக்கு பெரிய ஓபனிங் கிடைக்கவில்லை. அதேபோல் ஒரு சூழல் தற்போது மீண்டும் ஏற்பட்டிருப்பதாக திரைத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Most Popular