Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாநானே வருவனேன் பர்ஸ்ட் லுக்.. படத்தின் கதை என்ன?

நானே வருவனேன் பர்ஸ்ட் லுக்.. படத்தின் கதை என்ன?

- Advertisement -

நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளை ஜூலை 28ஆம் தேதி கொண்டாடுகிறார். இதனை ஒட்டி தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்துள்ளன. ஏற்கனவே கடந்த வாரம் அவர் நடித்த ஹாலிவுட் திரைப்படமான தி கிரேமன் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.இதில் தனுஷ் கதாபாத்திரம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமிருந்து பாராட்டை பெற்றது.

தமிழ் சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை சென்று தனுஷ் கலக்கியதாக பல பத்திரிகைகளும் பாராட்டிருக்கின்றன. இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வாத்தி திரைப்பட குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நாளை டீசரையும் வெளியிடப்பட உள்ளன. இதே போன்று திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூன்றாவது பாடலும் தனுஷ் பிறந்த நாளை பற்றி நாளை ரிலீசாக உள்ளது .

- Advertisement -

இந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த செல்வராகவன் தனுஷ் கூட்டணி உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் தனுஷ் காட்டு ஒன்றில் பாறையில் ஏறி நிற்பது போல காட்சியளிக்கிறார் .மேலும் சற்று நீள தலைமுடியுடன் இருக்கும் தனுஷ் ,மிகவும் இளமையாக தோன்றுகிறார். இறுதி கட்ட பணியில் என்று அந்த போஸ்டரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

- Advertisement -

நானே வருவேன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் செல்வராகவனும் நடிக்கிறார் மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பிறகு சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் இந்த மெகா கூட்டணியில் இணைந்திருப்பதால் படத்தின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. இதனிடையேஇந்த படத்தில் பயங்கரமான வில்லன் ஒருவரை நீங்கள் பார்ப்பீர்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு கூறியுள்ளார். அவர் யாரை கூறுகிறார்? தனுஷ் தான் இந்த படத்தில் வில்லனா போன்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Most Popular