இணையத்தில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம பிரபலமான நடிகர்களில் ஒருவரானவர் பிஜிலி ரமேஷ். இவர் இணையத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றின் மூலம் பிரபலமான காரணத்தால் பல தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாகவும் ,நகைச்சுவை நடிகராகவும் நடித்திருக்கிறார்.
இவர் காத்து வாக்குல ரெண்டு காதல் ,ஏ1, நட்பே துணை ,கோமாளி போன்ற திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உச்சத்தில் இருந்த இவர் திடீரென்று சினிமாவை விட்டு காணாமல் போகிவிட்டார்.
காணாமல் போன இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் .வசதியின்றி வறுமையில் வாடி வருகிறார். இன்னும் ஒரு படி மேலே சென்று இறந்து போய்விட்டார் என்றெல்லாம் பல வதந்திகள் இவரை பற்றி எழுந்தது .
அது எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பிஹைண்ட்வுட்ஸ் நடத்திய ஒரு பேட்டியில் பதிலளித்திருக்கிறார்.
எனக்கு எந்த நோயும் இல்லை நான் குத்துகள் போல தான் இருக்கிறேன் என்று ஆவேசம் அடைந்தார் பிஜிலி ரமேஷ் .அதே போல் என்னை எல்லாரும் பிரபலமாகிவிட்டார் லட்சக்கணக்கு சம்பாதித்து இருப்பார் என்று நினைக்கிறார்கள் ஆனால் ,நான் வாங்கிய சம்பளங்களில் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ப்ரோமோவிற்காக 20 ஆயிரம் ரூபாய் தான் அதிகபட்ச சம்பளம் என்று கூறி இருந்தார் பிஜிலி ரமேஷ்.
மேலும் அவர் நடித்த நிறைய திரைப்படங்களில் 15,000, 2,000, 3,000 என்றுதான் சம்பளம் வாங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார் எல்லாம் என் அன்றாட வாழ்க்கைக்கு சரியாகி விட்டது. இதில் எதை நான் சேமித்து லட்சாதிபதி ஆவேன் என்று கொந்தளித்தார் நடிகர் பிஜிலி ரமேஷ்
லாக்டவுனுக்கு பிறகு எந்த பட வாய்ப்பு பெரும் அளவில் கிடைக்கவில்லை. ஆனால் நான் தற்பொழுது சரத்குமார், நகுல் ,ஜி பி முத்து போன்றவர்களின் திரைப்படத்தில் நடித்திருப்பதாக பிஜிலி ரமேஷ் குறிப்பிட்டிருந்தார் .இதுவரை வெளியிடப்படாத திரைப்படங்கள் ஒரு ஏழு எட்டு திரைப்படம் நடித்திருக்கிறேன் என்றும் கூறியிருந்தார் பிஜிலி ரமேஷ்.
இவர் தற்பொழுது போதுமான வருமானம் இல்லாமல் ஒரு நாளைக்கு 550 ரூபாய் என்று இன்டீரியர் வேலை செய்பவர்களுடன் பணியாற்றுவதாக கூறியிருந்தார் .இதற்கு முன்பும் இவர் இந்த வேலையில் தான் இருந்ததாகவும் இந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
கடைசியாக உடன் பிறந்ததாக கூறிய அவருடைய சிக்னேச்சர் ஸ்டெப்பை போட்டு இன்டர்வியூவை நிறைவு செய்தார்.