பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களும் ஒருவராக பலம் வருபவர் நடிகர் அக்ஷய் குமார். ஹிந்தியில் பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தமிழில் முதல் முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 என்ற திரைப்படத்தின் வில்லனாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இவர் ஹிந்தியில் நிறைய திரைப்படங்களை நடித்து வந்தார். இவர் பொதுவாக தான் நடிக்கும் திரைப்படங்களுக்காக 80 கோடி முதல் 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
ஹிந்தியில் இவர் நடித்த சிம்பா,மிஷன் மங்கள், ஹவுஸ்புல் 4, குட் நியூஸ் ,சூரிய வம்சி போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக வெற்றியடைந்தது தொடர்ந்து இவர் நடித்த அட்ரங்கி ரே என்ற திரைப்படம் தமிழில் கல்யாண கலாட்டா என்ற பெயரில் வெளியானது .இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் மற்றும் கதாநாயகியாக சாரா அலி கான் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் கதாநாயகியின் தந்தையாக நடித்திருந்தார் அக்ஷய் குமார். இந்த திரைப்படம் கொரோனா காலத்தில் ஓ டி டி யில் வெளியானது .
இப்படியாக பல வெற்றிப் படங்களை நடித்து வந்த அக்ஷய் குமாருக்கு பச்சன் பாண்டே, சமார்ட் பிருதிவிராஜ், ரக்சாபந்தன் போன்ற திரைப்படங்கள் படும் தோல்வியை அடைந்தது. இவற்றால் தயாரிப்பாளர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.இவர்கள் இவ்வளவு நஷ்டம் அடைந்ததற்கு அக்ஷய் குமார் வாங்கும் சம்பளம் தான் காரணம் இன்றும் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான செய்திகளால் மனம் உடைந்து போன அக்சய் குமார் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.நடிகர் அக்ஷய்குமார் தன்னுடைய சம்பளமாக 20 கோடி ரூபாய் மட்டும் கேட்டிருப்பதாகவும் மேலும் படம் எடுத்து அதில் வரும் லாபத்தில் இருந்து ஒரு பங்கினை தனக்குத் தருமாறு தயாரிப்பாளர்களிடம் கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்பொழுது அக்ஷய் குமார் செல்பி என்ற திரைப்படத்திலும் மேலும் தமிழில் முன்னணி நட்சத்திரமான நடிகர் சூர்யா உடைய நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்பினை பெற்ற சூரரைப் போற்று என்ற என்ற திரைப்படத்தை ஹிந்தியில் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.