Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் விஜய்க்கு ஷாரூக்க்கான் நன்றி.. நீங்க தான் தளபதி என பாராட்டு

நடிகர் விஜய்க்கு ஷாரூக்க்கான் நன்றி.. நீங்க தான் தளபதி என பாராட்டு

- Advertisement -

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தமிழ் அல்லது ஹிந்தி படங்கள் ரிலீஸ் ஆனால் அதற்கான ட்ரெய்லர்களை வேறு மொழியில் உள்ள சூப்பர் ஸ்டார்களை தங்களது சமூக வலைத்தளத்தில் ரிலீஸ் செய்வார்கள். இந்த நிலையில் ஷாருக்கான் நடித்துள்ள பத்தான் திரைப்படத்திற்கான தமிழ் டிரைலர் இன்று யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் விஜய் வெளியிட்டு இருந்தார்.

இதனை இரு நடிகர்களின் ரசிகர்கள் கொண்டாடினர். காரணம் மற்ற நடிகர்களின் ப்ரோமோஷன்களை நடிகர் விஜய் இதுவரை செய்ததில்லை. ஆனால் நடிகர் விஜய்க்காக ஷாருக்கான் பீஸ்ட், பிகில் போன்ற படங்களின் ட்ரைலரை கேட்காமல் ஷேர் செய்து பாராட்டி இருக்கிறார். அதற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக இன்று விஜய் பத்தான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

பத்தான் திரைப்படம் வெற்றி பெற ஷாருக்கான் சாருக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ஷாருக்கான், உங்களுடைய இந்த செயலால்தான் நீங்கள் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படுகிறீர்கள். நாம் இருவரும் ஒரு விருந்தில் பங்கேற்க வேண்டும். மிக்க நன்றி நண்பா. இதனால் தான் நீங்கள் தளபதி என்று ஷாருக்கான் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நடிகர் ஷாருக்கானின் இந்த பதிலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே வாரிசு திரைப்படத்தில் ஹிந்தி டப்பிங் வரும் 13-ம் தேதி வெளியாக உள்ளது. புஷ்பா படத்தில் வெளியிட்ட கோல்ட் மைன்ஸ் நிறுவனம் ஹிந்தியில் வாரிசை ரிலீஸ் செய்ய இருக்கிறது. முதல்முறையாக வாரிசு ஹிந்தி படத்திற்கு அந்நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சிகளில் டிரைலர் மற்றும் டீசர்களை விளம்பரம் செய்து வருகிறது. இதனால் வாரிசு திரைப்படம் இதுவரை ஹிந்தி மார்க்கெட்டில் வெளியான விஜய் படங்களில் அதிக வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஷாருக்கானின் இந்த சமூக வலைதள பதிவும் வாரிசுக்கு சாதகமாக அமையும் என கருதப்படுகிறது.

Most Popular