பாம்பே ஜெயஶ்ரீ, இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகி. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தன் குரலை கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
சினிமா பாடல்களோடு பல இடங்களில் பாட்டுக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். அண்மையில் லண்டனில் நடைபெற்ற கச்சேரியில் பங்கேற்றார் பாம்பே ஜெயஶ்ரீ. அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில் அவரைக் காணப்போகும் போது தரையில் மயங்கி விழுந்துக் கிடந்தார்.
உடனே லண்டன் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பாம்பே ஜெயஶ்ரீக்கு மூலையில் கசிவு ஏற்பட்டதால் தான் மயங்கினார் எனத் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சையில் இருக்கும் பாம்பே ஜெயஶ்ரீயின் உடல்நிலை மெல்ல குணமாவதாகவும் தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். அவர் பூரண குணமடைய வேண்டிக் கொள்வோம்.
பாம்பே ஜெயஶ்ரீ தமிழில் முக்கியமாக ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் மிகவும் பிரபலமானவர். அவர் பாடிய முதற் கனவே பலருக்கு மிகவும் பேவரட். அது தவிர வசீகரா, ஒன்றா இரண்டா, சுற்றும் விழி சுடரே, பார்த்த முதல் நாள் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஹாரிஸின் இசையில் ‘ தி லெஜன்ட் ’ படத்தில் பாடினார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட இசையமைப்பாளரின் மெல் இசையிலும் பாடியுள்ளார்.
சென்னையில் இந்த கோடையில் ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டுக் கச்சேரி நடத்த உள்ளார். அதில் பாம்பே ஜெயஶ்ரீ இடம்பெறுவது மிகவும் முக்கியம். அதற்குள் அவர் குணமாகி, நல்ல விருந்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.