பொங்கலுக்கு விஜய் – அஜித் 8 ஆண்டுகள் கழித்து மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல்கள், டிரெய்லர் என அனைத்தையும் வெளியிட்ட பிறகும் ரீலீஸ் தேதியை தாமதித்து தான் அறிவித்தனர். இருவரின் படங்களும் ஜனவரி 11ஆம் தேதி மோதுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் 12 என அறிவித்து விட்டு பின்னர் 11ஆக மாற்றப்பட்டது வாரிசு படத்தின் ரீலீஸ் தேதி. மேலும், விஜய்யின் வாரிசு படத்தின் டிரெய்லரைப் பார்த்தப் பிறகு போனி கபூர் & கோ ரீலீஸ் தேதியை வழங்கினார். வெளிநாடுகளில் 12ஆம் தேதி என முன்னர் கூறிதால் அங்கு அதற்கேற்றவாறு டிக்கெட்டுகள் விற்பனை முடிவடைந்துவிட்டது. தற்போது 11 என மாற்றப்பட்டுள்ளது, சற்று சிக்கலை அங்கு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 11ஆம் தேதி வெளியீட்டை தியேட்டர் நிர்வாகிகள் எதிர்க்கின்றனர். இதனை அனைத்து குழப்பங்களுக்கும் ஒரே காரணம் முதல் நாள் கலெக்ஷன் தான். துணிவு திரைப்படம் 11ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட அன்று நடு இரவே வாரிசு படக் குழுவினரும் 11ஆம் தேதிக்கு மாற்றி அனைத்து, வலுவான மோதலை உறுதி செய்தனர்.
ஆன்லைன் டிக்கெட் விற்பணைகள் 7ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது. எல்லாம் சரியாக இருக்கும் இந்த வேளையில் மறுபடியும் துணிவு படத்தின் தயாரிப்பாளார் ஓர் டுவிஸ்ட்டை நம்மிடையே தூக்கி எரியவுள்ளார். திட்டமிடப்பட்ட 11ஆம் தேதிக்கு பதிலாக அதற்கு முந்தைய நாள் மாலை 8 அணி அளவிலேயே முதல் காட்சிகளை வெளியிடலாம் என்ற யோசனையில் உள்ளனர்.
அஜித்குமார் கிங் ஆப் ஓப்பனிங் என்ற பெயரைக் கொண்டவர். மேலும் தமிழகம் முதுவதும் துணிவுக்கே அதிக ஸ்கிரீன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு இருந்தும் ஏன் போனி கபூர் வாரிசு படத்தை விட முன் கூட்டியே அவரது திரைப்படத்தை வெளியிட வேண்டுமென்ற அவசரத்தில் உள்ளார் என்ற குழப்பத்திற்கு ரசிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 2 படங்களின் முதல் காட்சிகளும் ஜனவரி 11ஆம் தேதி இரவு 1 மணிக்கு போடப்படும். போனி கபூரின் புதிய திட்டத்தின் படி பார்த்தல் கூடுதலாக 2 காட்சிகள் இதற்கு முன் வெளியாகும். அதன் மூலம் மேலும் அதிக லாபம் சம்பாரிக்க பிளான் செய்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக இதை அவர் அறிவிக்கவில்லை.
இச்செய்தி உண்மையானால் நிச்சயம் தியேட்டர் உரிமையாளர்களை இது சோகத்தில் ஆழ்ததும். இதற்கு முன் இவ்வாறு நடந்ததிரு மோதலில் விஜய்யின் வேலாயுதத்தை எதிர்த்த சூர்யாவின் 7ஆம் அறிவு திரைப்படம் ஒரு நாள் முன்பாக, அதாவது மாலையில் இருந்து திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் துணிவு படமும் அவ்வாறு மாற்றியமைய அதிக வாய்ப்புகள் உள்ளன.