Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாபாஸ் என்கிற பாஸ்கரன் பாகம் 2 பணிகள் தீவிரம்.. சூட்டிங் எப்போது தெரியுமா?

பாஸ் என்கிற பாஸ்கரன் பாகம் 2 பணிகள் தீவிரம்.. சூட்டிங் எப்போது தெரியுமா?

கடந்த 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படம் ஆர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. ஆர்யாவும் சந்தானமும் இணைந்து செய்த காமெடி இன்று அளவும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

மதராசப்பட்டினத்திற்கு பிறகு ஆர்யா தொடர்ந்து இரண்டாவது ஹிட்டை இந்த படம் மூலம் கொடுத்தார். இந்த நிலையில் தற்போதயெல்லாம் இப்படி ஒரு காமெடி படம் வருவது இல்லை.

இதனால் காமெடி வறட்சி தமிழ்நாட்டு சினிமாவில் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆர்யாவும் ஏதேனும் ஒரு படத்தை ஹிட்டுக் கொடுக்க தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பாஸ் என்கிற பாஸ்கரன் 2 திரைப்படத்தை நடிக்கலாமா என கேட்டிருக்கிறார்.

- Advertisement -

இதற்கு சந்தானமும் கதை சரியாக இருந்தால் இயக்குனர் ராஜேஷ் பணியாற்ற விரும்பினால் நான் ரெடி என கூறிவிட்டாராம். இந்த நிலையில் இயக்குனர் ராஜேஷ் சி
ஹிட்டுக் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

- Advertisement -

இதனால் அவர் பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படத்திற்கான கதையை எழுதி முடித்து விட்டாராம். இந்த கதை சந்தானத்திற்கும் ஆர்யாவுக்கும் பிடித்துப் போக தற்போது இது நிஜமாக மாற இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் என தெரிகிறது.

ஆனால் முதல் பாகத்தில் இருந்த நயன்தாரா இந்த பாகத்தில் நடிப்பாரா இல்லை நயன்தாராவுக்கு பதில் வேறு நடிகை இருப்பாரா என தெரியவில்லை.மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன் என்பதை சுருக்கி பாஸ் 2 என பெயர் வைக்க பட குழு முடிவு எடுத்துள்ளது.

இதேபோன்று இந்த படம் வேறு கதையை கொண்டதா இல்லை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமா என்றும் தெரியவில்லை. 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சக்க போடு போட்ட இந்த திரைப்படம் மீண்டும் வெளியாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படத்தை 2024 தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் மீண்டும் ஆர்யா சந்தானம் ஜோடியை திரையில் பார்க்க இருக்கிறார்கள்.

Most Popular