Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமா“இருவருக்கும் ஆரம்பத்தில் கூச்சமாக இருந்தது, ஆனால்…” - சூர்யாவுடனான சந்திப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பதில்

“இருவருக்கும் ஆரம்பத்தில் கூச்சமாக இருந்தது, ஆனால்…” – சூர்யாவுடனான சந்திப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பதில்

- Advertisement -

தமிழ் திரையுலகில் தற்போதைய நடிகர்கள் தவிர்க்க முடியாதவர். முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர். ஆரம்பத்தில் இவரது திரை வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்கலை சந்தித்தாலும் தற்போது இவரின் திரை வாழ்க்கை ஏற்றத்தை மட்டுமே சந்தித்து கொண்டு வருகிறது. அறக்கட்டளை ஒன்று நடத்தி அதன் மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்காத அனைத்தையும் இவரால் வழங்க முடிகிறது. அவர் வேறு யாருமில்லை நடிகர் சூர்யா சிவகுமார் தான்.

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமான சூர்யா, அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி தனக்கான ஒரு தனி அங்கீகாரத்தை பெற்றார். சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் இவர் எடுத்த புகைப்படம் வைரலானது. அது பற்றிய தற்போது சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணையின் தவிர்க்க முடியாத முன்னணி வீரராவார். இவர் விளையாடிய காலத்தில் இவரை எதிர்த்து விளையாடி பந்துவீச்சாளர்கள் அனைவரும் இவரைக் கண்டு மிரண்டனர்.இவர் உயரம் குறைவாக இருந்தாலும் இவருடைய ஆட்ட திறமை எப்பொழுதும் உயர்வாகவே இருக்கும். அதுபோலவே நடிகர் சூர்யாவின் உயரம் குறைவாக, இருந்தாலும் அவருடைய நடிப்பு மிகவும் உயர்வாகவே இருக்கும் அதனால் இருவரும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் சந்தித்தார்கள்.

- Advertisement -

அந்த சந்திப்பை இருவரது ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தாலும், மற்றவர்கள் இந்த சந்திப்பு பற்றி கேலிக்கூத்தான கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள் ஆனாலும் ஏன் எதற்காக சந்தித்தார்கள்? என்ற தகவல் தற்போது வரை தெரியவில்லை.

இந்த நிலையில் இருவரும் சந்தித்த பின்னர்,சச்சின் டெண்டுல்கர் தனது சமூகதள பக்கத்தில்,தமிழில் “இன்று காலை சூரிய உதயம் சிறப்பு வாய்ந்தது சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்று பதிவிட்டிருந்தார்.

இன்று மீண்டும் அதே ட்விட்டர் தளத்தில் சூரியா உடனான சந்திப்பு பற்றி ரசிகர்கள் சச்சினிடம் கேட்டபோது “ஆரம்பத்தில், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பேசுவதற்கு தயங்கியிருந்தோம், ஆனால் இறுதியில், நாங்கள் ஒரு இனிமையான உரையாடலில் ஈடுபட்டோம்.இருவருக்கும் ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாக இருந்தது , ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் கடைசியில் நன்றாக அரட்டையடித்தோம் ” என்று பதிவிட்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா குடும்பத்துடன் மும்பையில் வீடு வாங்கி குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular