Monday, May 20, 2024
- Advertisement -
Homeசினிமாபிரதர் திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்ஸ்..! எப்போது ரிலீஸ்..?

பிரதர் திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்ஸ்..! எப்போது ரிலீஸ்..?

நடிகர் ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தை தொடர்ந்து பிரதர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன்பு இவர் இயக்கிய சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் , வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க , ஆல் இன் ஆல் அழகுராஜா ,மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

இந்த எல்லா திரைப்படத்திலும் நகைச்சுவைக்கு எந்த குறையுமே இருக்காது. கதைக்களத்தின் முக்கியத்துவம் எதுவாக இருந்தாலும் நகைச்சுவை பாணியில் தான் இந்த திரைப்படங்கள் இயக்கப்பட்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது .

அந்த அடிப்படையில் தற்போது இவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் இந்த பிரதர் திரைப்படம் நகைச்சுவை பாணியில் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிகை பிரியங்கா அருள் மோகன், சரண்யா பொன்வண்ணன் ,பூமிகா சாவ்லா ,வி டிவி கணேஷ் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்து வருகிறார்கள் .

- Advertisement -

இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இந்த திரைப்படம் நடிகர் ஜெயம் ரவிக்கு 30-வது திரைப்படம் ஆகும்.

- Advertisement -

சமீபத்தில் இவருக்கு வெளிவந்த சைரன் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து இவர் தற்பொழுது நடித்திருக்கும் இந்த பிரதர் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எந்த திரைப்படத்தையும் தற்போது வெளியிடாமல் காய்ந்து போய் இருக்கும் தமிழ் சினிமாவிற்கு வசந்த காலம் கோடை விடுமுறையில் தான் வரும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் திரைப்படத்தை வருகின்ற கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதற்கான பணியில் தற்பொழுது இந்த படக்குழுவினர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் என்று இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்ற தகவலும் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Most Popular