சினிமா

அஜித் 62 படம் ரீமேக் ? உண்மை என்ன ? வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட்.. !

Ajith and Magizh Thirumeni

தற்போது கோலிவுட்டின் பெரிய பேச்சாக இருப்பது லியோ மற்றும் அஜித் 62 தான். விஜய்யின் லியோ டாப் எதிர்பார்ப்பாக விளங்குகிறது மறுபக்கம் அஜித் 62 படம் டாப் சீக்ரட்டாக இருக்கிறது. துணிவு திரைப்படம் நிறைவு பெற்ற உடனே தன் அடுத்த படத்தின் ஷூட்டிங்கை அஜித் தொடரவிருந்தார், ஆனால் விக்னேஷ் சிவனின் முழுமையான கதை அஜித் தரப்பை போது செய்யாததால் அவர் நீக்கப்பட்டார்.

ஒரு இயக்குனரிடம் படம் செய்ய ஒப்புக்கொண்டு பின்னர் அவரை அஜித் விலக்ச் சொல்வது இதுவே முதல் முறை. இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷ் சிவனும் இடத்தை நிரப்ப பல இயக்குனர்கள் அஜித்திடம் கதை கூறினர். இறுதியில் லைகா நிறுவனம் மற்றும் அஜித் & கோ இயக்குனர் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளது, குறிப்பு இன்னும் இது அதுகாரபூர்வ அறிவிப்பாக வெளியாகவில்லை.

Advertisement

துணிவு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து சென்டிமென்ட் படங்களை தவிர்த்துப் மீண்டும் ஆக்க்ஷன் படங்களை செய்ய அஜித் திட்டமிட்டுள்ளார். அதனால் மாஸான மற்றும் ஆக்க்ஷன் காட்சிகள் இடம்பெற வேண்டும் என மகிழ் திருமேனியுடன் அஜித் தரப்பு தெரிவித்துள்ளதாக கூறினர். அந்தப் பணியில் இயக்குனர் மகிழ் திருமேனி ஈடுபட்டிருந்தார்.

டாப் சீக்ரெட்டாக கிடக்கும் அஜித் 62 படத்தைப் பற்றி ஓர் ருசிகர செய்தி கசிந்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் திரைப்படம் ரீமேக் படமாக தயாராகவுள்ளது. எந்தப் படத்தின் ரீமேக் எனத் தெரியவில்லை. இது டிவிட்டரில் சினிமா விமர்சகர்கள் வெளியிட்ட செய்தி மட்டுமே. டிவிட்டரில் வெளியான இந்த செய்திக்கு சச்சின் பட இயக்குனர் ” நிச்சயம் கிடையாது ” என மறுத்துள்ளார். அவர் இப்படி கமன்ட் செய்ததால் அது இல்லை எனவும் ஆகிவிடாது. ஏப்ரல் மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது. விரைவில் ஷூட்டிங் துவங்கவிருக்கும் நிலையில் படக்குழு தீபாவளி வெளியீட்டை குறி வைக்கின்றனர்.

Advertisement

அஜித் கடைசியாக நடித்த ரீமேக் திரைப்படமான நேர்க்கொண்ட பார்வைக்கு வரவேற்புகள் ஏராளமம் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரீமேக் படம் செய்வது போல அவரது போட்டியாளர் விஜய்யும் அதே பாதையில் தான் பயணித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ ஹாலிவுட்டில் வந்த ‘ தி ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் ’ படத்தின் ரீமேக் எனக் கூப்படுகிறது. ஆனால் இதற்கும் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top