இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர் இந்த படம் தனுஷுக்கு மிகப்பெரிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் என அனைத்துமே பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த படம் சுதந்திரப் போராட்டத்திற்கு முன் நடைபெறும் கதைக்களத்தை கொண்டது. இதில் நடிகர் தனுஷ் புரட்சியாளராக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தற்போது மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது.
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முதுமலை காட்டுப்பகுதியில் நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் அங்கு இருந்த கால்வாய் பகுதிகளில் மண்களைப் போட்டு பட குழுவினர் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக தண்ணீர் ஓடுவதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.
இதேபோன்று வனப்பகுதிகளில் முன் அனுமதியின்றி பட குழுவினர் மரத்தால் ஆன பாலங்களை அமைத்திருக்கிறார்கள். அதையும் படக்குழு அகற்றவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு பயன்படும் என்று நாங்கள் அகற்றவில்லை என்று பட குழு தெரிவித்துள்ளது. ஆனால் இது வனவிலங்குகள் ஊர் பகுதிக்குள் வர வழி வகுக்கும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோன்று கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் படக்குழுவினர் குண்டுகளை வெடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்திருக்கிறது. முன் அனுமதியின்றி காட்டுப் பகுதிகளில் குண்டு வைத்து வெடித்திருப்பது வனத்துறை விதிகளுக்கு எதிரானது என்றும் இதனால் கேப்டன் மில்லர் படத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசிய போது நாங்கள் முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதியும் வனத்துறை அமைச்சரிடம் முன் அனுமதி பெற்று தான் செய்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் கேப்டன் மில்லர் படத்திற்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.