Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாகேப்டன் மில்லர் - வெறித்தனமாக காட்சி அளிக்கும் நடிகர் தனுஷ்

கேப்டன் மில்லர் – வெறித்தனமாக காட்சி அளிக்கும் நடிகர் தனுஷ்

- Advertisement -

2021 ஆம் ஆண்டு ராக்கி என்ற திரைப்படத்தையும் 2022 ஆம் ஆண்டு சாணி காகிதம் என்ற திரைப்படத்தையும் இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தற்பொழுது 2023 ஆம் ஆண்டு கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு  நடிகர் மாதவன் மற்றும் நடிகை ரித்திகா சிங் ஆகியோரின் நடிப்பில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் வசனம் எழுதி இருக்கிறார்.

இவர் தற்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதாநாயகனாக  தனுஷ் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த திரைப்படத்திற்கான பூஜைகள் முடிந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி படப்பிடிப்பும் தொடங்கியது.இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷோடு இணைந்து கதாநாயகியாக நடிகர் பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். அவர்களோடு சந்திப் கிஷாந்த் நிவேதிதா சதீஷ் சிவராஜ் குமார், ஜான் கோகன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாக உள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு தொடங்கிய இந்நிலையில் இந்த படப்பிடிப்புக்கான வேலை எவ்வளவு விரைவாக நடந்து வருகிறது என்பதை பற்றிய ஒரு காணொளியை தற்பொழுது இணையதளத்தில் படக்குழுவினர்கள் வெளியாகி இருக்கிறார்கள்.

- Advertisement -

கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பல பேர் கொண்ட குழுவாக தீவிரமான வேலைகள் நடந்து வருகிறது. இந்த காணொளியின் இறுதியில் நடிகர் தனுஷ் கையில் ஒரு துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நிற்பது போன்று ஒரு காட்சியும் இடம்பெற்று இருக்கிறது. அதில் நடிகர் தனுஷின் முகம் தெளிவாக தெரியவில்லை. இந்த வீடியோவிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மிரட்டராக இசையமைத்திருக்கிறார். ஆனால் அவரைப் பார்ப்பதற்கு காட்டில் பதுங்கியிருக்கும் போராளியை போன்று உள்ளார் என்று தோன்றுகிறது.

இது 1930 ஆம் ஆண்டு அதாவது சுதந்திரப் போராட்டம் நடக்கக்கூடிய அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டது போன்ற கதைக்களம் ஆகும்.அதனால் இந்த துப்பாக்கி இந்த கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கும் காலகட்டங்கள் இவையற்றையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது தனுஷின் உடைய தோற்றம் அவ்வாறு தோன்றுகிறது.

தனுஷ் தற்பொழுது வாத்தி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியான கதைகளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் இருக்கு இந்த கேப்டன் மில்லர் திரைப்படம் முற்றிலும் புதுமையாக இருக்கும் என்று ரசிகர்களால் பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Most Popular