புரட்சிக் கலைஞர் மற்றும் மக்களின் கேப்டன் விஜயகாந்த் நேற்று முன்தினம் காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள், பிரபலங்கள் குவிந்தனர். தீவுத் திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் நேற்று மாலை புதைக்கப்பட்டது.
இரு தினங்களாக எங்கு பார்த்தாலும் விஜகயாந்த் பற்றிய பெருமையே. காரணம் அவரைப் பற்றி புகழ அவ்வளவு நல்லது செய்துள்ளார். மக்களுக்காக உதவ வேண்டும் என அதிகம் நினைத்து எத்தனையோ ஏழைகள் சாப்பிட, வாழ்கையில் உயர நிறைய உதவி செய்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.
அப்படி ஒரு உதவியவர்களில் நடிகர் தனுஷ் குடும்பமும் ஒன்று. தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜாவும் கேப்டன் விஜயகாந்தும் நல்ல நெருங்கிய நண்பர்கள். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘ வீரம் விளைஞ்ச மண்ணு ’ எனும் படத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார். நல்ல நட்புக்கு அடையாளமாக அவருக்கு பெரிய உதவியை செய்துள்ளார் கேப்டன்.
ஒரு நாள் கஸ்தூரி ராஜாவின் வீட்டிற்க்கு சென்றிருந்த விஜயகாந்த் அங்கே தனுஷின் இரண்டாவது சகோதரி அழுதுக் கொண்டிருப்பதைக் கண்டு விசாரித்துள்ளார். கஸ்தூரி ராஜாவின் இரண்டு மகள்களுக்கு மருத்துவராக வர வேண்டும் என்பது கனவு. முதல் மகள் பல் மருத்துவராக உள்ளார்.
இரண்டாவது மகள் கார்த்திகா தேவிக்கு கட் ஆப் சற்று குறைவாக இருந்ததால் மருத்துவச் சீட்டு கிடைக்கவில்லை. இதனைத் தெரிந்துக் கொண்டு உடனே ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்து அவர்களைக் கூட்டிச் சென்று டாக்டர் சீட்டை வாங்கித் தந்துள்ளார் நம் கேப்டன் விஜயகாந்த்.
இன்று கார்த்திகா தேவி மகப்பேறு மருத்துவராக உள்ளார். இதற்கு தனுஷின் குடும்பமே கேப்டனுக்கு மிகப் பெரிய நன்றிக் கடன்பட்டுள்ளது. இது போல எக்கச் சக்க உதவிகளை செய்துள்ளார், அதனால் தான் அவரை எல்லோரும் ‘ விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன் பா ’ என்கின்றனர்.