Thursday, November 21, 2024
- Advertisement -
Homeசினிமாமோசமான நிலையில் கேப்டன் விஜயகாந்த்.. வெளியான அறிக்கை.. மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

மோசமான நிலையில் கேப்டன் விஜயகாந்த்.. வெளியான அறிக்கை.. மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ் திரையுலகில் முன்னொரு காலத்தில் அமர்களப்படுத்திய நடிகர்களில் ஒருவர் விஜய்காந்த். மக்கள் இவரை அன்பாக கேப்டன் என அழைத்தனர். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த் கடந்த பத்து ஆண்டுகளாக நடிக்கவில்லை. சினிமாவைத் தொடர்ந்து அரசியலுக்குள் குதித்தார்.

- Advertisement -

பெரிதாக அரசியலில் சாதிக்கவில்லை என்றாலும் மக்களுக்காக எப்போதும் நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் வெள்ளை மனம் கொண்டவர். அதனாலேயே இவருக்கு ரசிகர்கள் பலம் கூடுதல். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவரது கட்சியைக் கூட அவரது மனைவி தான் தலைமை தாங்கி நடத்துகிறார்.

மிகவும் மெளிவடைந்து பேசக் கூடாது நிலைமையில் தென்பட்டார் கேப்டன் விஜயகாந்த். சில பண்டிகை தினங்களில் அவரது புகைப்படங்கள் வெளியாகும். அண்மையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மூன்று தினங்கள் முன்னர் அறிக்கை கொடுத்தனர்.

- Advertisement -

அதில் கேப்டனுக்கு நுரையீரல் பிரச்சினையால் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும் உடனடியாக சிகிச்சை செய்தால் பூரண குணமடைவார் என போட்டிருந்தது. அதன் படி சரியாக சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென அதிர்ச்சித் தகவல். தற்போது விஜயகாந்த் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளதால் மீண்டும் மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரைக் காண நாசர், ஆர்.கே.செல்வமணி நேரில் சென்றுள்ளனர். மூன்றாம் கட்ட நிலை என்பதால் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் துறையினர் பேரிகேட் அமைதுள்ளதால் ரசிகர்கள் யாரும் தவறாக எண்ண வேண்டாம்.

நம் கேப்டன் விஜயகாந்த் நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார். அவரை 24/7 நேரமும் மருத்துவர்கள் கண்காணித்துக் கொண்டே வருகின்றனர். அடுத்தகட்ட சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருவதால் நல்ல செய்தி நிச்சயம் வரும்.

Most Popular