சினிமா

எப்பா… அஜித் இவ்வளவு கெட்ட வார்த்தை பேசியிருக்காரா ! துணிவு படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு !

Thunivu censor certificate

பொங்கலுக்கு விருந்து அளிக்கவிருக்கும் துணிவு & வாரிசு இரு படங்களும் தங்களது இறுதிக்கட்ட பணிகளை விரைந்து செய்து வருகின்றனர். இடையே ரசிகர்களைக் குஷிப் படுத்த அவ்வப்போது அப்டேட்களும் கொடுத்து வருகின்றனர். துணிவு படத்தைப் பொறுத்தவரை அனைத்து பாடல்களும், டிரைலரும் வெளியாகிவிட்டது. தற்போது அவர்கள் இதர புரொமோஷன் வேளைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். வாரிசு படத்திற்கு இன்னும் டிரெய்லர் மட்டும் பாக்கி. சென்சார் வேலைகள் முடிந்தவுடன் ஜனவரி 4ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் துணிவு படத்தின் அனைத்து சென்சார் வேலைகளும் முடிவடைந்து திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. மியூட் செய்யப்பட்டுள்ள வார்த்தைகள் மற்றும் மாற்றங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டிரைலரில் அஜித்குமார் கெட்ட வார்த்தை பேசியிருந்தார், படத்திலும் நிறைய இடங்களில் கண்டெடுக்கப்பட்டு மியூட் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்குமார் படத்தில் கெட்ட வார்த்தை பேசுவது இப்போதுதான். ஆனால் மங்காத்தாவிற்குப் பின் சிகிரட்டை தொட மாட்டேன் எனக் கூறிய வார்த்தைகளை இன்னும் காப்பாற்றி வருகிறார். அவர் மிகக் கொள்கையான மனிதன் என்பது இன்று நேற்றா தெரிந்த விஷயம்.

டிரெய்லர் இறுதிக் காட்சியில் “ *த்தா செய்றோம் ” எனப் பேசிவிட்டு துப்பாக்கி சுடுதல் நடத்துவார். ரசிகர்கள் அனைவரும் பழைய வில்லன் அஜித்குமாரைப் பார்த்த சந்தோசத்தில் இருந்தனர். இதே போல படத்திலும் சில கேட்ட வார்த்தைகள் பல முறை ரிப்பீட் ஆகியுள்ளது. “ *த்தா, புடுங்கி ” இந்த 2 வார்த்தைகள் எக்கசக்க இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலக் கெட்டவார்த்தை “ *பக் ” ஒரு முறை படத்தில் வருகிறது, அதுவும் எடுக்கப்டுள்ளது.

Advertisement

மேலும், கொடூர காட்சிகள் சிலவற்றையும் நீக்கப்டுள்ளது. படத்தில் குழந்தையை தலை கீழாக தூக்கி நிறுத்தும் காட்சி 50 சதவீதம் நீக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் பார்த்து அஜித் ரசிகர்கள் விநாயக் மகாதேவ் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்ப்பை கூட்டியுள்ளனர். அதை அவர்கள் குறைத்து வைத்திருப்பது நல்லது.

ஏனென்றால், இதே போல் தான் வலிமை சென்சார் சான்றிதழ் வெளியான போதும் சாத்தானின் அடிமைகள் பார்த்து ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்து ஏமாந்தனர். ஏற்கனவே இயக்குனர் ஹெச்.வினோத், துணிவு படம் அனைத்து பார்வையாளர்களும் மகிழ்ந்து பார்க்கும் படமாக இருக்கும் எனவும் அது வங்கிக் கொள்ளையை மட்டுமே மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் இல்லை எனவும் தெரிவித்துவிட்டார். அதனால் படம் வந்தப் பின் கம்பு சுத்துவது சாமர்த்தியம்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top