Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாதுண்டை காணும், துணியை காணும் என ஓடும் சந்திரமுகி 2

துண்டை காணும், துணியை காணும் என ஓடும் சந்திரமுகி 2

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து வாரிசு ,துணிவு , பத்து தல, வாத்தி,மாமன்னன் ,மாவீரன், ஜெய்லர் என்று முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகிறது

- Advertisement -

இந்த வரிசையில் தற்பொழுது இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் திரை உலகின் முன்னணி நாயகனான ஷருக்கானின் நடிப்பில் ஜவான் நேற்றைய தினம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் தற்பொழுது வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி மார்க் ஆண்டனி மற்றும் சந்திரமுகி 2 என்ற இரண்டு திரைப்படங்களும் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளிவந்திருந்தது.

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ராணாவத், லட்சுமிமேனன், மகிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார் போன்ற பிரபலங்கள் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சந்திரமுகியின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் வாசு தான் இரண்டாவது பாகத்தையும் இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

ஏறத்தாழ 17 ஆண்டுகள் கழித்து சந்திரமுகியின் இரண்டாவது பாகத்தை தற்பொழுது இயக்கி இருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அண்மையில் வெளியிடப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரைலர் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் திசை திருப்பி விட்டது.

நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா வின் காம்போவில் திரைப்படத்தின் உடைய ட்ரெய்லர் முற்றிலும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் வண்ணம் அமைந்திருந்தது.

பார்ப்பதற்கே ஒரு வித்தியாசமான கதைக்களம் போன்ற எண்ணம் தோன்றுகிறது. இதனால் தற்பொழுது ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் எதிர்பார்ப்பும் மார்கண்டினி திரைப்படத்தின் மீது ஏற்பட்டிருப்பதால் இரண்டு திரைப்படங்களையும் ஒரே நாளில் வெளியிடுவது சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு நல்லதல்ல என்பதால் படக்குழுவினர்கள் இத்திரைப்படத்தை வருகின்ற 28ஆம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

சந்திரமுகி 2 திரைப்படத்தின் டிரைலருக்கு கிடைத்த விமர்சனங்களை வைத்து தான் இந்த முடிவிற்கு படக்குழுவினர்கள் வந்திருப்பார்கள் என்பது தெரிய வருகிறது. மேலும் நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படமும் வருகின்ற 28ஆம் தேதி தான் வெளியிடப்படுவதாக இருந்தது.

ஆனால் அந்த திரைப்படத்தை தற்பொழுது நவம்பர் மாதத்திற்கு மாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது இதை கருத்தில் வைத்து தான் சந்திரமுகி 2வை சோலோவாக இறக்க முடிவு செய்து இருக்கிறார்கள் பட குழுவினர்கள்.

Most Popular