Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாசந்திரமுகி 2 ரிலீஸ் தேதி இது தான்..! லாரன்ஸ்க்கு வெற்றி தருமா?

சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி இது தான்..! லாரன்ஸ்க்கு வெற்றி தருமா?

- Advertisement -

2005 ஆம் ஆண்டு இயக்குனர் வாசுவின் இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,பிரபு, நயன்தாரா,ஜோதிகா, வடிவேலு, நாசர் என்று பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

இந்தத் திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட அமைந்தது. அதிலும் குறிப்பாக இது திரைப்படத்தின் நடிகை ஜோதிகாவின் உடைய நடிப்பு ரசிகர்களில் மனதில் பெருமளவில் இடம் பிடித்தது. அதேபோல் திரைப்படத்தின் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
இதுவெல்லாம் இந்த திரைப்படத்திற்கு கூடுதலாக சுவாரசியத்தை தந்தது.

- Advertisement -

திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகம் வர வேண்டும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது இயக்குனர் வாசு சந்திரமுகி 2 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் நடிகர் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும் நடிகை கங்கனா, ராதிகா மகிமா நம்பியார்  நகைச்சுவையின் நடிகர் வைகைப்புயல் வடிவேலு போன்ற பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை லட்சுமிமேனன் நடித்து வருகிறார். இந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவு பெற்று வருகிறது.

இன்னும் மூன்று பாடல்களும் ஒரு சண்டைக்காட்சியும் மீதம் இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதையும் விரைவாக முடித்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த திரைப்படத்தை வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியிடப் போவதாக தகவல் வெளிவந்திருக்கிறது.

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்பொழுது நடித்து திரையரங்கங்களில் வெளிவந்த ருத்ரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சற்று கலவையான விமர்சனத்தை தான் பெற்றது. அதனால் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. பொதுவாகவே முனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற திரைப்படங்களில் எல்லாம் ராகவா லாரன்ஸ்  நடிப்பும் கதையும் கொண்டாடப்படக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது.

ஹாரரான திரைப்படங்களையும் நகைச்சுவையான பாணியில் மிக அழகாக படமாக்கி இருந்தார். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இது போன்ற கதை களம் இவருக்கு மிக பொருத்தமாக அமைந்திருக்கும். அதனால் இந்த சந்திரமுகி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular