Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாசந்திரமுகி 2 என்ன ஆச்சு.. வடிவேலு, லாரண்ஸ் இடையே மோதலா?

சந்திரமுகி 2 என்ன ஆச்சு.. வடிவேலு, லாரண்ஸ் இடையே மோதலா?

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிக்கு பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் என்றால் அது சந்திரமுகி தான். இந்தப் படத்தை இயக்குனர் பி வாசு இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்திருந்தார். இதில் திகிலுக்கு நிகராக காமெடிக்கும் பஞ்சம் இல்லாத வகையில் படம் அமைக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் லாரன்ஸ் வைத்து பி வாசு இயக்கி வருகிறார். இந்த படத்தில் கங்கணா ராவத் சந்திரமுகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்தப் படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. நடிகர் லாரன்ஸ்க்கும் வடிவேலுக்கும் இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் வடிவேலு நடித்த காட்சிகளை நீக்கி மீண்டும் வேறொரு நடிகரை வைத்து எடுக்க திட்டமிடப்பட்டதாக செய்திகள் வந்தது.

- Advertisement -

ஆனால் அது அனைத்தும் பொய் என்று தற்போது நிரூபணம் ஆகி உள்ளது. சந்திரமுகி 2 விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் லாரன்ஸ் ருத்ரன் திரைப்படத்திற்காக ப்ரமோஷன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அதே நிலையில் வடிவேலு மாமன்னன் திரைப்படத்திற்காக சில காட்சிகளின் நடிக்க சென்றிருந்தார். இதனால் படப்பிடிப்பு சிறிது நாள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது.

இதில் நடிகர் லாரன்ஸும் வடிவேலும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இங்கு 15 நாட்கள் வரை நடைபெறும்
இந்த படப்பிடிப்பு அத்துடன் முடிவடைந்து படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular