2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் என்றால் அது லியோ தான். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 500 கோடி வருமானத்தை லியோ திரைப்படம் பெற்றிருக்கிறது.
ட்ரிபிள் ஆர்,கே ஜி எஃப் வரிசையில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை லியோ திரைப்படம் பெறும் என சினிமா துறை வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் இது ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் திரைப்படத்தின் ரீமேக்காக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். தற்போது கிட்டத்தட்ட அதே கதை களத்தை கொண்டுதான் லியோ திரைப்படம் இருக்கும் என கருதப்படுகிறது.
லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு கேரக்டர் கருப்பு பக்கத்தை உடையதாகும், இன்னொரு கேரக்டர் அதை மறைத்து சாதாரண வாழ்க்கையை வாழும் நபர் ஆகும். அப்படி கருப்பு பக்கத்தை மறைத்து சாதாரண கேரக்டரில் வாழும் விஜயின் பெயர் பார்த்திபன் என கூறப்படுகிறது.
பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் காஷ்மீரில் சாக்லேட் பேக்டரி நடத்தி வருகிறார். இதேபோன்று கருப்பு பக்கங்கள் உடைய கதாபாத்திரத்தின் பெயர் தான் லியோ. இதேபோன்று அர்ஜுன் விஜயின் அண்ணனாக நடிக்கிறார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் நடிகர் அர்ஜுன் சஞ்சய் தத்தின் தம்பியாக தான் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தெரிகிறது.
விஜயை பழிவாங்க அர்ஜுனும் சஞ்சய் தட்டும் வருவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. பார்த்திபன் கதாபாத்திரம் வழக்கமான அனைவரிடம் சிரித்து பேசும் கதாபாத்திரத்தில் விஜய் வருகிறார். ஆனால் இதற்கு அப்படியே நேர்முகமான கொடூர முகத்தை உடைய கேரக்டரில் லியோ இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.