சினிமா

சென்னை மேயர் ப்ரியாவுக்கு பிடித்த நடிகர் விஜயா? அஜித்தா?

சென்னை மாநகராட்சியில் மிக இளம் வயது மேயராக பொறுப்பேற்று இருப்பவர் பிரியா. எப்போதும் மழைக்காலத்தில் சென்னை வெள்ளக்காடாக இருந்த நிலையில் தற்போது பிரியா தலைமையிலான அதிகாரிகள் செய்த துரித நடவடிக்கையால் கடந்த முறை சென்னை தப்பித்தது.

Advertisement

இதேபோன்று பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்குகளை சுத்தம் செய்து அதனை பயோ கெமிக்கல் முறையில் மாற்றும் முயற்சியையும் மேயர் பிரியா மேற்கொண்டார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்ற மேயர் பிரியாவிடம் திரைப்படங்கள் பார்க்க நேரம் இருக்குமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, பொங்கல் பண்டிகையொட்டி திரையரங்குகளில்  திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்ததாக கூறினார்.

அப்போது  எந்த படத்தை பார்த்தீர்கள் என்று நெறியாளர் கேட்டதற்கு, வாரிசு படத்தை குடும்பத்துடன் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று அவர் கூறினார். அதன் பிறகு நெறியாளர் உங்களுக்கு வாரிசு பிடித்துதா இல்லை துணிவு பிடித்ததா என்று கேட்டதற்கு சிரித்த மேயர் பிரியா வாரிசு தான் பிடித்தது என்று கூறினார்.

Advertisement

இதனை அடுத்து நெறியாளர் அப்போது நீங்கள் யாருடைய ரசிகர் என்று எங்களுக்கு தெரிந்து விட்டது என்று கூற அதற்கு மேயர் பிரியா சிரித்து ஆம் என்று பதில் கூறினார். எனினும் தமது ஃபேவரிட் நடிகர்கள் என்றால் அது உதயநிதி ஸ்டாலினும், விஜய் சேதுபதியும் என்று பளிச்சென்று பதில் கூறியிருக்கிறார். மேயர் ஆவதற்கு முன்பு netflixல் ஆங்கில தொடர்களை பார்க்கும் பழக்கம் உடைய மேயர் பிரியா, தற்போது அந்தப் பக்கம் போகவே நேரம் இல்லாமல் இருக்கிறாராம்.

இதேபோன்று திரைப்படங்களும் பார்க்க தற்போது போதிய அளவில் நேரமில்லை என்றும் மேயர் பிரியா கூறியுள்ளார் . அரசியலில் தமக்கு உதயநிதி ஸ்டாலின் தான் முன்னுதாரணம் என்று பெயர் பிரியா கூறி இருக்கிறார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top