Sunday, November 17, 2024
- Advertisement -
Homeசினிமா" அதுக்குள்ள கோப்ரா HD வந்துடுச்சா ! " கோபத்தில் கொந்தளிக்கும் சியான் விக்ரம் ரசிகர்கள்

” அதுக்குள்ள கோப்ரா HD வந்துடுச்சா ! ” கோபத்தில் கொந்தளிக்கும் சியான் விக்ரம் ரசிகர்கள்

சென்ற மாதம் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் பல வேடங்களில் நடித்த கோப்ரா திரைப்படம் வெளியானது. சிக்கல்கள், தள்ளிவைப்புகள் எல்லாம் தாண்டி அன்று அதிகாலை 5 மணிக்கு வெளியான இந்த படத்திற்கு பல எதிர்பார்ப்புகள் ! படம் முடிந்து வெளியான விமர்சனங்கள் அனைத்தும் ரசிகர்களின் காத்திருப்பை சல்லி சல்லியாக நொறுக்கியது.

- Advertisement -

படத்தின் முதல் பாதி சூப்பர் ! இடைவேளை டிவிஸ்ட் ஆச்சர்யம் ! போகப் போகத் தான் சறுக்கினார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இரண்டாம் பாதியில் தேவை இல்லாத காதல் காட்சிகளை இணைத்து படத்தின் நீளத்தை கூட்டி பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார் இயக்குனர். கோப்ரா வெளியாகும் முன்பே பார்வையாளர்கள் இதனைக் கண்டு சற்று பயந்தனர். அவர்கள் நினைத்து போலவே அதே குற்றச்சாட்டு தான் முதல் நாள் அன்று வந்தது.

பின்னர் படக்குழு 20 நிமிடங்களை நீக்கி அடுத்த நாள் காட்சிகளில் சற்று நேரம் குறைவான படத்தை திரையிட்டது. இருந்தும் எந்த பயனும் இல்லை. படத்தின் விக்ரமின் நடிப்பு மற்றும் ரஹ்மானின் இசை மட்டுமே ஆறுதலான விஷயம். மூன்று மணி நேரத்திற்கு தேவையான கதை இருந்தால் மட்டுமே நீளமான படத்தை தைரியமாக வெளியிட வேண்டும். சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு.

- Advertisement -

வெளியானது கோப்ரா எச்.டி

கோப்ரா திரைப்படம் வெளியாகி வெறும் 16 நாட்களே ஆகிறது. தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓடிடி செய்திகள் கூட வரவில்லை. இருப்பினும் அதற்கு முன்பே வெளிநாட்டில் ஈந்துசன் நிறுவனம் மூலமாக கோப்ரா எச்.டி படம் வந்துவிட்டது. மிகவும் தெளிவான எச்.டி இல்லையென்றாலும் பார்கும் படியான ப்ரிண்ட்டில் வந்துள்ளது. கொந்தளித்த சியான் ரசிகர்கள் டிவிட்டரில் அவர்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இணையதளத்தில் தமிழ் பிளாஸ்டர்ஸ் மற்றும் டெலிகிராமில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

முன்னெல்லாம் திரையில் வரும் திரைப்படம் எச்.டி பார்மட்டில் வெளியாக குறைந்தது 2 மாதங்கள் எடுக்கும். தற்போது லாக்டவுனுக்குப் பின் ஓடிடி ஆதிக்கத்தினால் ஒரே மாதத்தில் எச்.டி ப்ரின்ட் வந்துவிடுகிறது. படம் மிகவும் சுமார் மேலும் வெந்து தணிந்தது காடு போன்ற புதிய படங்களின் வருகை அதிகம் இருப்பதால் திரையரங்கை விட்டு எளிதாக வெளியேறியது.

Most Popular