சினிமா

வருகிறது கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்ட படைப்பு ! பர்ஸ்ட் லுக்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Christopher Nolan Oppenheimer

உலக சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை அறிவியல் பூர்வமாக எடுத்துச் சொல்லும் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் கிறிஸ்டோபர் நோலன். நோலன் படம் என்றாலே அதை பார்ப்பதற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும். மெமண்டோ, பிரெஸ்டிஜ், இன்செப்ஷன், இன்ட்ரஸ்டேல்லார் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் பாராட்டு பெற்றவை.

சமீபத்தில் வெளியான டேனெட் திரைப்படமும் வசூலை வாரிக் குவித்தது. சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களை மட்டுமல்லாது, பேட்மேன் போன்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தையும் வேற லெவலில் எடுத்து தனக்கென ஒரு முத்திரையை குத்திக் கொண்டார் கிறிஸ்டபார் நோலன். டேனெட் படத்திற்காக விமானத்தை குண்டு வைத்து தகர்க்கும் காட்சியை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் உண்மையான விமானத்தை வைத்து எடுத்தவர் கிறிஸ்டோபர் நோலன்.

இந்த நிலையில் ஒப்பன்ஹமர் என்ற புதிய படத்தை அவர் எடுத்து வருகிறார். சிலியன் முர்பியை நாயகனாக வைத்து நோலன் எடுத்து வரும் படத்தில் அயர்ன் மேன் ஹீரோ ராபர்ட் டவுனி ஜூனியர் இடம்பெற்று இருக்கிறார் . சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்ட வருகிறது. அணுகுண்டுகளின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓபன்ஹம்மர் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

கிறிஸ்டோபர் நோலன் திரைப்படத்தை எப்போதும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வெளியிடும் . ஆனால் இம்முறை யுனிவர்சல் பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இதற்கு காரணம் வார்னர் பிரதர்ஸ் தன்னுடைய படத்தை திரையரங்கு மற்றும் ஓ டி டி யில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய நூலன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இதற்கு வானார் பிரதர்ஸ் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனை அடுத்து இந்த படத்தை யூனிவர்சல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை 100 மில்லியன் செலவில் விளம்பரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நோலன் படம் திரையரங்குக்கு வந்து 100 நாட்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் படத்தை வெளியிடும் யுனிவர்சல், பேராமவுன்ட் நிறுவனம், ஓபன்ஹம்மர் படத்திற்கு முன்பும் பின்பும் மூன்று வாரங்கள் வரை வேறு எந்த படத்தையும் அந்நிறுவனம் ரிலீஸ் செய்ய கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓபன்ஹம்மர் திரைப்படம் உலக அளவில் 400 மில்லியன் வசூல் செய்தால் மட்டுமே லாபத்தை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓபன்ஹமர் திரைப்படம் வரும் அதே நாளில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பார்பி திரைப்படமும் திரையரங்குக்கு வர இருக்கிறது. இது ஓபன்ஹமர் திரைப்படத்தின் வசூலை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது .இதனிடையே விமானத்தை உண்மையாகவே வெடிக்க வைத்த கிறிஸ்டோபர் நோலன் , அணுகுண்டு காட்சிக்கு என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் தற்போது மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top