சினிமா

படம் ரிலீஸ் ஆனப் பின் 30 நிமிடங்களை நீக்கவுள்ள கோப்ரா படக்குழு – இந்த அதிரடி முடிவுக்கு காரணம் இதுதான் !

Cobra

2019ஆம் வெளியான கடாரம் கொண்டான் படத்திற்குப் பின் மூன்று ஆண்டுகள் கழித்து தியேட்டரில் சியான் விக்ரமின் படம் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் வந்த மஹான் திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இருப்பினும் அது ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் வெளியாகும் கோப்ரா படத்திற்கே ஆவலாக காத்திருந்தனர்.

பல முறை தள்ளிப் போன இந்த படம் இறுதியாக திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி அன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகியது. விக்ரம் பல கெட்டப்பில் வந்து அசத்தபோவதைக் கான பலரும் காத்திருந்தனர். இயக்குனர் அஜய் ஞானமுத்து & கோ பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் காட்சி முடிவில் படக்குழுவால் எதிர்பார்த்த வெற்றியை பெற இயலவில்லை.

Advertisement

படத்தில் விக்ரம் அசத்துகிறார். அவரது பணிகளை அவர் கணக் கட்சிதமாக முடித்து விடுகிறார். ஆனால் திரைக்கதையில் இயக்குனர் கோட்டை விட்டுள்ளார். இரண்டாம் பாதியில் இரு வேடங்களை வைத்து பார்வையாளர்களை குழப்பி, ஓர் சிறப்பான தொடக்கத்தை மோசமாக முடித்துள்ளார் இயக்குனர் அஜய். மேலும் இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் சோபிக்கவில்லை. ஒரு சில காட்சிகளில் தரமான இசை கொடுத்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர் திருப்திபடுத்தவில்லை.

படத்தின் நீளம் மற்றொரு குறைபாடும். மூன்று மணி நேர படத்தில் முதல் பாதி சிறப்பாக அமைந்தது. ஆனால் இரண்டாம் பாதி தூக்கதை உண்டாக்கியது என்பதே பெரும்பாலான பார்வையாளர்களின் விமர்சனமாக இருக்கிறது. அதனால் படக்குழு அதிரடியான ஓர் முடிவுக்கு வந்துள்ளது. மூன்று மணி நேரத்தில் 30 நிமிடங்களை நீக்க திட்டமிட்டுள்ளார்கள். இது பார்வலையாகளர்கள் சலிப்பில்லமல் பார்க்க உதவும் என்றெண்ணி படக்குழு இதைச் செய்கின்றனர். ட்ரிம் செய்யப்பட்ட படம் நாளை முதல் திரையிடப்படும் எனக் கூறியுள்ளனர்.

Advertisement

ஏற்கனவே இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பை உண்டாகி வெளியான வலிமை திரைப்படத்திற்கு, முதல் நாள் விமர்சனங்களைக் கண்டு படக்குழு 10 – 15 நிமிடங்களை நீக்கியது. அதே போல் தான் கோப்ராவுக்கும் நடக்கிறது. நாளை நீக்கும் காட்சிகளை படம் ரிலீஸ்க்கு முன்னரே செய்திருந்தால் முதல் நாளே நல்ல விமர்சனம் கிடைத்திருக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top