Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாபச்சையாக பொய் பேசி மாட்டிகொண்ட லைக்கா நிறுவனம்.. லால் சலாம் திரைப்படத்தின் வசூல் இவ்வளவுதானா?

பச்சையாக பொய் பேசி மாட்டிகொண்ட லைக்கா நிறுவனம்.. லால் சலாம் திரைப்படத்தின் வசூல் இவ்வளவுதானா?

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் திரைப்படம் கலமையான விமர்சனங்களை பெற்று பின் தள்ளப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதால் ஆரம்பத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த திரைப்படத்திற்கு இருந்தது. அதிலும் ஜெயிலர் திரைப்படம் தந்த வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படம் வெளிவர இருப்பது இதற்கு மிகப்பெரிய பிளஸ் என்று பலரும் கருத்து கூறி வந்தனர்.

தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டது போல் ஐஸ்வர்யா ராஜினிகாந்த் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன் தந்தை சங்கி  இல்லை என்று கூறியது இத்திரைப்படத்திற்கு எமன் ஆகிவிட்டது. நன்றாக கிடைக்க இருந்த ரீச்சை இது கெடுத்துவிட்டதென்று சொல்லலாம்.

- Advertisement -

கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு மத வாதத்தை பேசும் திரைப்படமாக பார்க்க தொடங்கி விட்டார்கள் ரசிகர்கள். அதனால் இந்த திரைப்படத்திற்கு பெருமளவில் யாரும் ஆதரவு கொடுக்க தயாராக இல்லை என்பது இத்திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பே தெரிந்து விட்டது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 9ஆம்  தேதி வெளிவந்த இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறது .இதற்கு முன்பு இவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் முதல் நாளை 40 கோடிக்கு மேல் வசலை பெற்று சாதித்தது.

ஆனால் தற்பொழுது வெளியாகி  இருக்கும் லால் சலாம் திரைப்படம் இதுவரை ஆறு நாட்களைக் கடந்திருக்கிறது. இந்த ஆறு நாட்களும் வெறும் 15 கோடியே வசூலை பெற்றிருக்கிறது . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உயிர் ரசிகர்கள் கூட இதை காரணம் காட்டி திரைப்படத்தை நிராகரித்து விட்டார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தினுடைய தயாரிப்பு நிறுவனமான லைக்கா எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்கள் லால் சலாம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதித்து வருகிறது என்று பதிவிட்டு இருக்கிறார்கள் இந்த பதிவிற்கு கீழ் ரசிகர்கள் கேலி செய்து வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹோமியோ கதாபாத்திரம் என்று கூறி ஒரு மணி நேரம் இத்திரைப்படத்தில் நடித்திருப்பதே திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மீது ஏற்பட்ட இந்த சர்ச்சையால் இத்திரைப்படத்திற்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டு வசூல் ரீதியாகவும் பின்னடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

.

Most Popular