Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாவங்கி கொள்ளை படத்தில் எதுக்குயா தங்கத்துரை.. பீஸ்ட் வாசனை அடிக்குதே?

வங்கி கொள்ளை படத்தில் எதுக்குயா தங்கத்துரை.. பீஸ்ட் வாசனை அடிக்குதே?

- Advertisement -

துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத்துடன் அஜித் இணைந்திருப்பதால் ரசிகர்களுடைய பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி உள்ளது. அஜித் எப்போதும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தால் அது செம ஹிட் ஆகி விடும். மங்காத்தாவில் இதேபோன்று எதிர்மறையான கேரக்டரை அஜித் ஏற்று நடித்து பெரும் வரவேற்பை பெற்றது.

இதுபோன்று வேதாளம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது துணிவு படத்தில் வங்கிக் கொள்ளையில் அஜித் ஈடுபடுவது போல் கதைக் களம் அமைக்கப்பட்டு இருக்கிறது. நெட்பிளக்சில்  வெளியாகி பெரும் ஹிட்டான மணி ஹிஸ்ட் கதைகளம் போல் துணிவு இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் துணிவு படத்தில் பாடல்கள் இருப்பதால் வங்கிக் கொள்ளையின் போது பாடல் எப்படி வரும் என கேள்வி எழுந்தது.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த  வினோத் படம் முடிந்த பிறகு இந்தப் பாடல்கள் இடம் பெறும் என்று கூறினார்.இந்த நிலையில் துணிவு படத்தில் காமெடி நடிகர் தங்கதுரை நடித்திருப்பதாக அவரே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்ததும் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் வங்கிக் கொள்ளையின்போது பட காட்சிகள் விறுவிறுப்பாகவும் டென்ஷன் ஆகவும் இருந்தால் மட்டுமே அது படத்திற்கு பலமாக அமையும். ஆனால் தங்கதுரை போன்ற நகைச்சுவை நடிகர்கள் படத்தில் இடம் பெற்று இருந்தால் அது பீஸ்ட் போல் ஆகிவிடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

பீஸ்ட் படத்தில் வணிக வளாகத்தை தீவிரவாதிகள் ஆக்கிரமித்த நிலையில் அதனை ஹீரோ முறியடிப்பது தான் கதையாகும். ஆனால் பீஸ்ட் திரைப்படத்தில் பல காமெடி நடிகர்கள் மாலில் செய்யும் சேட்டைகள் படத்தின் மையக் கருத்தையே பாதித்தது. இதனால் பீஸ்டுக்கு ஏற்பட்ட நிலைமை துணிவு படத்திற்கும்  வந்து விடுமோ என்ற அச்சம் அஜித் ரசிகர்களுடைய ஏற்பட்டுள்ளது.

Most Popular