Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாதிரௌபதி போன்ற கன்டென்ட் படங்கள் தான் தமிழ் சினிமா வெற்றி.. விஷால் பேசியதற்கு சரமாரியாக எதிர்த்துப்...

திரௌபதி போன்ற கன்டென்ட் படங்கள் தான் தமிழ் சினிமா வெற்றி.. விஷால் பேசியதற்கு சரமாரியாக எதிர்த்துப் பேசிய மோகன் ஜி.. !

நடிகர் விஷால் மார்க் ஆண்டனி வெற்றி சந்திப்பில் இளம் இயக்குனர்கள் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிப்புகளுக்கு நல்லது சொல்கிறேன் என அவர்களை குறைத்துப் பேசினார். சினிமா வட்டாரங்களில் பெரும் குற்றச்சாட்டாக அவரை எதிர்த்தனர்.

- Advertisement -

மார்க் ஆண்டனி திரைப்படம் பல படங்களுக்குப் பின் விஷாலின் சினிமா கேரியரில் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. மொத்தத்தில் சுமாரான படமாக இருந்தாலும் எஸ்.ஜே.சூர்யாவின் பாவனையையும் காமெடிகளையும் மக்கள் தியேட்டரில் மகிழ்ந்து பார்த்தனர். உலகளவில் 100 கோடி வசூலையும் பெற்றது.

செய்தியாளர்கள் சந்திப்பில் படத்தைப் பற்றி பேசியதுடன் விஷால், “ ரூபாய் 1 முதல் 4 கோடி பட்ஜெட்டில் படங்களை தயாரிக்காதீர்கள். உங்களுக்கு ஒரு பைசா கூட திரும்பி வராது. அந்தப் பணத்திற்கு ஏதாவது நிலம் வாங்கிப் போடுங்கள். காரணம் இன்னும் 120 படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. 2 வருடங்களுக்கு சின்னப் படங்களை தயாரிக்க வராதீர்கள் ” என கடுமையாகப் பேசினார்.

- Advertisement -

இவரின் இந்த வார்த்தைகளுக்கு அண்மையில் ‘ வா வரலாம் வா ’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன் ஜி எதிர்ப்பு தெரிவித்துப் பேசியுள்ளார். இயக்குனர் மோகன் ஜி கூறியதாவது, “ தமிழ் சினிமாவில் கன்டென்ட் படங்கள் தான் வெற்றிப் பெரும். பெரிய பட்ஜெட் சின்ன பட்ஜெட் என்றெல்லாம் இல்லை. விஷாலின் பேச்சைக் கெட சில தயாரிப்பாளர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்த சிறிய படங்களை கைவிட்டுள்ளனர். சிறிய இயக்குனர்கள் அதனால் வாழ்கையை இழந்துள்ளார்கள் என முன்னர் பேசியவர் கூறினார். ”

- Advertisement -

“ அவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். வருத்தப்பட வேண்டாம், கன்டென்ட் தான் முக்கியம். சிறந்த உதாரணம் நான் தயாரித்த என் மூன்று படங்கள். திரௌபதி 75 லட்சம் பட்ஜெட், ருத்ரதாண்டவம் 4 கோடி பட்ஜெட், பகாசூரன் 5 கோடி பட்ஜெட்டில் உருவாகின. என் முதல் படம் திரௌபதி 18 கோடியை வசூல் செய்து வெற்றிப் வெற்றிப் படமாக அமைந்தது. ” என சிறிய இயக்குனர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார்.

மேலும், “ மலையாளத்தில் 10 லட்சத்தில் உருவானப் படம் 13 கோடி லாபம் பார்க்கிறது. இந்த ஆண்டு தமிழிலேயே டாடா, குட் நைட், போர் தொழில், அயோத்தி போன்ற படங்கள் தான் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால் இயக்குனர்கள் கன்டென்ட் மீது கவனமா செலுத்துவது அவசியம். ”

“ ஆனால் விஷால் சார் சொன்னதில் ஒரு உண்மை உள்ளது. ஓடிடியில் சின்னப் படங்களை மதிக்க மாட்டார்கள். அவர்களாக நம்மை தேடி வந்தால் தான் உண்டு. நம்மால் அவர்களை சந்தித்து இது குறித்துப் பேசவே இயலாது. ” என இயக்குனர் மோகன் ஜி மிகச் சரியாக தெளிவாக பேசியுள்ளார்.

Most Popular