சினிமா

sleeping star அஸ்வினின் அடுத்த திரைப்படம்.. திரில்லர் இயக்குனருடன் கை கோர்ப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் மூன்றில் பங்கு பெற்று பின் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். அதற்கு முன்பு அவர் நிறைய திரைப்படங்களில் துணை நட்சத்திரமாக நடித்திருந்தார். ஆனால் அது எதுவும் அவரை பிரபலமாகவில்லை. குக் வித் கோமாளியின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டப்பட்டார். அதற்குப் பிறகு இவருக்கு சில பட வாய்ப்புகள் வந்தது.

Advertisement

ஆரம்பக் காலத்தில் சின்ன திரையில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் அஸ்வின் குமார். 2022 ஆம் ஆண்டு என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதற்குப் பிறகு நடந்த ஒரு பிரஸ்மீட்டில் அவர் பேசிய பேச்சு அவருடைய வளர்ச்சிக்கு பெறும் தடையாகி விட்டது. எவ்வளவு உயரம் சென்றாலும் தன்னடக்கம் தான் ஒரு மனிதனை மென்மேலும் உயர்த்தும். அது இல்லாவிட்டால் வாழ்வில் அடுத்த தரம் என்பது எட்டாதூரமாகிவிடும்.

நடிகர் அஸ்வின் குமார் இதுவரை நான் 20 கதைகள் கேட்டிருக்கிறேன். சில கதைகளை கேட்கும் பொழுது தூங்கி விடுவேன் என்று பேசிய தலைகனம் மிகுந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் இவரை பெரும் சர்ச்சையில் சிக்க வைத்தது. அதற்குப் பிறகு இவர் மேல் இருந்த மரியாதை ஈர்ப்பு எல்லாம் உருக்குலைந்து போனது.

Advertisement

சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஸ்வின் குமார் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார். தற்பொழுது மைனா, கும்கி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமனின் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் குமார் செம்பி என்ற திரைப்படம் ஒன்றை நடித்திருந்தார் .அதில் அஸ்வின் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஆவார். இவர் பேச்சால் குறைந்த இவருடைய வளர்ச்சி தற்பொழுது இவருடைய திறமையான நடிப்பால் மேலும் உயரத் தொடங்கி இருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான தேஜாவு என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் குமார் தன்னுடைய அடுத்த படத்தை நடிக்க இருக்கிறார் .
இந்தத் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேஜாவூ திரைப்படம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் . அதே போல் இந்த திரைப்படமும் அமையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் அஸ்வின் தனக்கு கிடைத்திருக்கும் இந்த இரண்டாவது வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top