Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமாடாடா வசூல் - சாதனை படைத்த கவின்..! போட்டி போடும் பிறமொழி தயாரிப்பாளர்கள்

டாடா வசூல் – சாதனை படைத்த கவின்..! போட்டி போடும் பிறமொழி தயாரிப்பாளர்கள்

- Advertisement -

விஜய் டிவியில் சீரியலில் அறிமுகமாகி பிறகு பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின் கடந்த ஆண்டு லிஃப்ட் என்ற படத்தில் நடித்து நல்ல பேரை பெற்ற கவின், தற்போது டாடா படம் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு பெயரை பிடித்துள்ளார். ரசிகர்கள் மனதை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் பத்து நாட்களில் 11 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் போட்ட பணத்தை விட மூன்று மடங்கு தயாரிப்பாளர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் உரிமையை வாங்குவதற்காக பல்வேறு மொழி தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகிறார்கள். குறிப்பாக ஹிந்தியில் இந்த படத்தை எடுக்க முன்னணி நிறுவனம் ஒன்று களத்தில் இறங்கி உள்ளது. தெலுங்கிலும் இந்த படத்தை எடுக்க நாக சைதன்யா போன்ற நடிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதனிடையே டாடா திரைப்படத்தையும் மோகன் ஜி எடுத்த பகாசூரன் திரைப்படத்தையும் ரெட் ஜெயின்ஸ் நிறுவனம்தான் வாங்கி வெளியிட்டு இருக்கிறது. இதில் பகாசூரன் திரைப்படம் பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வழக்கம் போல் மோகன்ஜி படத்தில் என்ன இருக்குமோ அதே தான் இந்த படத்திலும் இடம்பெற்று இருக்கிறது. படத்தின் விமர்சனமும் கலவையாக இருப்பதால் திரையரங்குகள் வெறிச்சோடி கிடைக்கிறது.இந்த நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீசான டாடா படத்தை பல்வேறு திரையரங்குகளில் இருந்து தூக்கி விட்டு ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் 17ஆம் தேதி ரிலீசான பகாசூரன் படத்தை திரைக்கு கொண்டு வந்தது.

- Advertisement -

ஆனால் ரசிகர்களிடையே எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் மீண்டும் டாடா படத்தை திரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சில வசூலை டாடா திரைப்படம் இழந்தாலும் தற்போது மீண்டும் பல்வேறு திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது இது நடிகர் கவினுக்கு கிடைத்த வெற்றி ஆக பார்க்கப்படுகிறது.

Most Popular