சினிமா துறையை பொறுத்தவரை வாய்ப்பு என்பது வயது வரம்பில்லாமல் கிடைக்கும் என்பதை சமீபத்தில் டான்சர் ரமேஷ் என்பவர் நிரூபித்தார். தன்னுடைய 50ஆவது வயதில் டிக் டாக் மூலமாக தன்னுடைய நடனத் திறமையை வெளிப்படுத்தினார். இவர் போடும் டிக் டாக் வீடியோக்களை மிக மிக எளிமையாக இருக்கும். இந்த வீடியோவிற்கு ஆடம்பரம் சேர்க்கும் வகையில் எந்த செலவும் இன்றி தன்னுடைய திறமையை மட்டுமே வெளிப்படுத்தி பதிவிட்டிருப்பார். இதன் மூலம் இவர் சினிமா துறையில் ஒரு டான்ஸராக நுழைந்தார்.
ஒரு சாமானிய மனித தன்னுடைய திறமையை மட்டுமே வைத்து சினிமா துறைக்கு வருவதெல்லாம் மிகப்பெரிய சாதனைதான். அது இவருக்கு இளம் வயதில் கிடைக்கவில்லை .ஆனாலும் திறமைக்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இவர் தன்னுடைய ஐம்பதாவது வயதில் அவருடைய திறமைக்கு ஒரு அங்கீகாரத்தை தேடி அது வெற்றியும் பெற்றார். மேலும் ஒரு படி சென்று தல அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் இவர் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெறும் டிக் டாக் ஆக இருந்து பின் தல படத்தில் நடிக்க கூடிய அளவிற்கு குறுகிய காலத்திலேயே வளர்ந்து ஓரளவு பிரபலமானவர் டான்சர் ரமேஷ். இவருடைய வளர்ச்சியில் யார் கண் பட்டதோ தெரியவில்லை இவருடைய ஒட்டுமொத்த கனவும் நேற்றோடு சரிந்தது. டான்சர் ரமேஷ் நேற்று திடீரென்று 10 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இவருடைய வளர்ச்சியை கண்டு எடுத்துக்காட்டாக கொண்டு பலரும் முயற்சி செய்து அதில் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டு வரும் இந்த சமயத்தில் இவர் எடுத்திருக்கும் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது .டிக் டாக் ஆக இருந்த காலத்தில் இருந்தே இவருக்கென்று பல ரசிகர்கள் இருந்து வந்தார்கள்.
அவர்களும் இந்த செய்தியை தாங்க முடியாமல் பெரும் சோகத்தில் இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க இந்த நிலையில் டான்சர் ரமேஷ் தற்கொலைக்கு என்ன காரணம் என்றெல்லாம் பலரும் பலவிதத்தில் பேசிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் ஆதாரப்பூர்வமான எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.