Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாபுஷ்பா போல் தெறிக்கும் நாணியின் தசாரா.. டீசர் எப்படி இருக்கு

புஷ்பா போல் தெறிக்கும் நாணியின் தசாரா.. டீசர் எப்படி இருக்கு

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுனா நடித்த புஷ்பா திரைப்படத்தை மீண்டும் பார்ப்பது போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கிறது நேஷனல் ஸ்டார் நானி நடித்திருக்கும் தசரா திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த்  இயக்கி இருக்கிறார். மேலும் இது இவரே எழுதி இயக்கிய முதல் படமாகும்.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஞானி உடன் இணைந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பலமொழியில் தனக்கென்று பல ரசிகர் பட்டாளங்களைக் கொண்ட  நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைத்திருக்கிறார். இவர் இதற்கு முன்பு தமிழில் வெளிவந்த ஜிகர்தண்டா, கபாலி, பைரவா, சர்பட்டா பரம்பரை, சூது கவ்வும் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் .  தெலுங்கில் பில்லா ரங்கா, குரு போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்தத் திரைப்படம் எழுவது கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இன்று இந்தத் திரைப்படத்தின் உடைய டீசர் இணையதளங்களை வெளியாகி கலக்கிக் கொண்டுள்ளது. மேலும்  தமிழ் சினிமா உடைய முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் தசரா திரைப்படத்தின் உடைய டீசரை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தசரா டீசர் பார்ப்பதற்கு பயங்கர திரில்லாக இருக்கிறது.  நடிகர் நானி உடைய தோற்றமும் ஏறத்தாழ புஷ்பாவில் வரும் அல்லு அர்ஜுனாவை போன்று இருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் தெலுங்கானா மாநிலம் கோதாவரிகானி அருகே உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தை பற்றிய கதைக்களத்தை கொண்டுள்ளது.

- Advertisement -

இந்த திரைப்படம் முழுவதுமே ஆக்சன் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசரில் இறுதியில் நடிகர் ஞானி தன் வாயில் கத்தியை வைத்துக்கொண்டு அதை தன்னுடைய கட்ட விரலை கிழித்து நெத்தியில் திலகம் இடுவது போன்று அமைந்திருக்கும் காட்சி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தசரா திரைப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் நிச்சயமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Most Popular