Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாபல லுக்கில் நடிக்கும் தனுஷ்.. மில்லர் படத்தின் புதிய தகவல்

பல லுக்கில் நடிக்கும் தனுஷ்.. மில்லர் படத்தின் புதிய தகவல்

தமிழ் சினிமாவில் வடசென்னை அசுரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வெற்றிவாகை சூடிய தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிப்பதாக இருக்கிறார். இந்த படம் நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கி வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை படப்பிடிப்பு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

தனுஷ் இந்த படத்தில் பல்வேறு லுக்கில் நடிக்க இருப்பதாகவும் மேலும் இந்த கதை 1930 ஆம் ஆண்டில் உள்ள நடைபெறுவதை போன்று படமாக்கப்படுகிறது. அதற்கான படப்பிடிப்பிற்கான வேலை அமைப்புகள் 1930 போன்று பிரம்மாண்டமான செட்கள் அமைக்கும் பணி நடப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி உள்ளது. அதில் தனுஷ் அசுர வேகத்தில் பைக்கை ஓட்டி வருவது போலவும் அவருக்குப்பின் பைக்கில் இரண்டு மூன்று பேர் துரத்தி வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ரசிகர்கள் தயாரித்த பான்மை போஸ்டரை தனுஷ் வாவ் என்று போட்டு ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்

- Advertisement -

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது அசுரன்,ஆடுகளம் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அதேபோன்று கேப்டன் மில்லர் திரைப்படமும் இசையிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மில்லர் திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் அருண் மாதேஸ்வரன் திரைப்படம் என்றாலே ரத்தமும் சதையும் தெறிக்கும் அளவுக்கு இருக்கும் ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான ராக்கி மற்றும் சாணி காகிதம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது இரண்டு படங்களுமே வித்தியாசமான கதைகளத்தில் ஆக்சன் காட்சிகளை ராவாக காட்டிருந்தார். இந்த நிலையில் தனுஷ் உடன் அவர் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை மையமாக வைத்து திரையரங்குகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு மேலும் ஒரு உற்சாக செய்தி வெளிவந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பில் நடிகர் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் டிரைலர் வரும் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ளது இதேபோன்று அண்மையில் வெளியான தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தின் டீசரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

Most Popular