Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதனுஷ் பிறந்தநாள் முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்பரைஸ்..! 2 நாளில் இரண்டு அறிவிப்பு

தனுஷ் பிறந்தநாள் முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்பரைஸ்..! 2 நாளில் இரண்டு அறிவிப்பு

- Advertisement -

நடிகர் தனுஷ் பிறந்தநாள் வரும் 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தற்போது தனுஷ் பெயர்தான் அனைத்து மொழி ஊடகங்களிலும் எதிரொலிக்கிறது. அதற்கு காரணம் அவர் சமீபத்தில் நடித்து வெளியான ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் தான். இந்த படத்திற்கு ப்ரமோஷனுக்காக ரூசோ பிரதர்ஸ் மும்பை வந்து தனுஷை வெகுவாக பாராட்டினர்.

இந்த படத்திலும் தனுஷின் கதாபாத்திரம் மிரட்டராக அமைந்திருந்தது. 20 நிமிடம் வந்திருந்தாலும் மனதில் நிற்கும்படி தனுஷ் தனது அதிரடி ஆக்சனை காட்டி விட்டார். இந்த நிலையில் நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வாத்தி பட குழு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. வாத்தி திரைப்படம் மூலம் நடிகர் தனுஷ் முதல் முறையாக தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

- Advertisement -

வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தாநடிக்கிறார்.இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றுகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் பிறந்தநாள் ட்ரீட்டாக வரும் 28ஆம் தேதி வாத்தி திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் ஆக இருக்கிறது. தெலுங்கில் இந்த திரைப்படம் சார் என பெயரிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் பணி முடிவடைந்து விட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. செல்வராகவனுடன் பல ஆண்டுகள் கழித்து தனுஷ் இணைந்து பணியாற்றுகிறார்.தம்பிக்கு பிறந்தநாள் பரிசாக நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகும் என தகவல் வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் வாத்தி பட குழு தனுஷ் ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்திருக்கிறது. இதேபோன்று வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் அந்தப் படம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் ஏதேனும் வீடியோ வெளியிட வாய்ப்பு உள்ளது.இதனால் தனுஷ் ரசிகர்களுக்கு இந்த வாரம் முழுவதும் கொண்டாட்டம் தான்.

Most Popular