சினிமா

தனுஷின் வாத்தி படத்தைப் பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுத ரசிகர் – வீடியோ இணைப்பு.. !

Dhansuh fan cries after watching vaathi

அண்ணன் செல்வராகவனின் பகாசூரன் படத்துடன் தம்பி தனுஷ் மோதலில் ஈடுபட்டுள்ளார். தனுஷின் வாத்தி படமும் பகாசூரனும் நேற்று (பிப்ரவரி 17) வெளியானது. முதல் நாள் முடிவில் இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எதிர்பார்த்தது போல பகாசூரன் சமூகத்திற்கு தேவையற்ற கருத்துகளைக் கொண்டதாக தயாராகியுள்ளது. மறுபக்கம் வாத்தி திரைப்படம் அதற்கு எதிராக பிரதிபலிக்கிறது.

தனுஷ், சம்யுக்தா முன்னணி நடிகர்களாக வரும் இப்படத்திற்கு பார்வையாளர்கள் & விமர்சகர்கள் என பெரும்பாலானோர் நல்ல வார்த்தைகளையே பகிற்கின்றனர். தலைப்புக்கு ஏற்ப கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் படமாகவே அமைத்துள்ளது.

Advertisement

சென்ற ஆண்டு தனுஷுக்கு 4 படங்கள் வெளியாகின. அதில் ஒரு படம் மட்டுமே சிறப்பாக ஓடியது. மாறன், நானே வருவேன் மற்றும் ஹாலிவுட்டில் வெளியான தி கிரேமேன் என மற்ற மூன்றும் மிகவும் சுமாரான மதிப்பெண்களயே பெற்றது.

வாத்தி திரைப்படம் வழக்கமான கமர்ஷியல் படம் தான். அதை நன்கறிந்த ரசிகர்கள் அவர்களது எதிர்பார்ப்பை அதே அளவில் வைத்து திரையரங்குகளுக்குச் சென்றுள்ளனர். அதனால் ஏமாற்றம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை.

Advertisement

படத்தைப் பார்த்துவிட்டு தனுஷ் ரசிகர் ஒருவர் மிகவும் எமோஷனல் ஆகி கண்ணீர் விட்டுள்ளார். அவர் கூறியதாவது, “ படம் ரொம்ப சூப்பரா இருக்கு. என்னை அறியாமலே நான் அழுதுவுட்டேன். காரணம் தனுஷின் ஆக்டிங். ” என்றார்.

அதோடு, “ நானே வருவேன் படத்திற்கு எல்லாரும் கேவலமா விமர்சனம் தந்தார்கள். மேலும் வாத்தி படத்திற்கும் பலர் நெகட்டிவ்வாக் பேசினார். ஆனால் அதெல்லாம் எதுவுமே பலிக்கவில்லை எனக்கு. ” எனக் கூறி கங்கலங்கினார் அவர். படத்தில் எந்தக் காட்சி உங்களை இவ்வளவு எமோஷனல் ஆக்கியது எனக் கேட்டதற்கு அவர், “ கிளைமாக்ஸ் காட்சியில் மற்றவர் நல்லதுக்கு தனுஷ் பேசுவது அழுகையைத் தூண்டியது ” எனக் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top