சினிமா

‘கிரே மேன் ‘ ஹாலிவுட் திரைப்படத்தின் தனுஷ் ரோல் ! முதல் விமர்சனம் வெளியானது !

Dhansuh The Grayman

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் தனுஷ், தற்போது ஹாலிவுட் வரை சென்று தமிழக ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை இயக்கிய ருஷோ பிரதர்ஸ் கிரே மேன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஹாலிவுட் வரலாற்றில் அதிக பொருட்செல்வில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் 22ஆம் தேதி நேட்பிளிக்சில் வெளியாக உள்ளது. அமெரிக்காவில் ஒரு சில திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது. கிறிஸ்ட் இவன்ஸ் , ரயான் கோஸ்லிங், ஆனா டி ஆர் மாஸ், நடிகர் தனுஷ் ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கிரே மேன் திரைப்படத்தின் பிரிவியூ ஷோ பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த பத்திரிகையாளர் கோட்டினி ஹவார்ட் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் தனுஷ் கதாபாத்திரம் குறித்து அவர் எழுதியுள்ள விமர்சனம் தற்போது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.அதில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிரட்டலாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கிரே மேன் திரைப்படம் விறுவிறுப்பாக பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படமாக வந்திருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

கிரே மேன் படத்தில் டீசர் அண்மையில் வெளியானது. இதில் நடிகர் தனுஷ் சண்டைக்காட்சிகளில் ஈடுபடுவது போன்ற சீன்கள் இடம்பெற்றன. இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹிட்மேன் ஆக நடித்துள்ளார். கிரே மேன் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஒரு மாதம் தங்கி இருந்து பயிற்சியில் ஈடுபட்டார் படத்தின் இயக்குனர் ரூசோ பிரதர்ஸ் நடிகர் தனுஷை தம்பி என்று அழைத்து டிவிட் போட்ட நிகழ்வும் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறகு ஹாலிவுட்டில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹீரோ என்ற பெருமையை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.

கிரே மேன் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ்க்கு இன்னும் பல ஹாலிவுட் வாய்ப்புகள் வரலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாலிவுட்டில் நடிகர் தனுஷ் 3 படங்களில் நடித்து அங்குள்ள ரசிகர்களிடையே பரிச்சயம் ஆகி இருக்கிறார். தனது ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் ஏற்கனவே உலக அளவில் நடிகர் தனுஷ் டிரெண்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top