சினிமா

மீண்டும் ரிலீஸாகும் தனுஷ் – செல்வராகவனின் பழைய படம் ! ரசிகர்கள் மகிழ்ச்சி

Dhansuh and Selvaraghavan

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனத் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார். இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான தி கிரேமேன் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் மிதக்கின்றனர். அதற்கு முன்பாக ஜூலை 8ஆம் தேதி தனுஷின் அறிமுகப் படமான ‘ துள்ளுவதோ இளமை ‘ திரைப்படத்தை டிஜிட்டலைஸ் செய்து திரையிட படக்குழு முடிவெடுத்துள்ளது.

தனுஷின் குடும்பம் ஒன்றிணைத்து உருவாக்கிய படம் துள்ளுவதோ இளமை. நடிகர் தனுஷ் நடிக்க, அவரது அண்ணன் திரைக்கதை எழுத, அப்பா கஸ்தூரி ராஜா படத்தை இயக்கினார். யுவன் ஷங்கர் ராஜா கைவண்ணத்தில் உருவான பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட். இன்றும் பலரது ப்லேலிஸ்ட்டில் முன்னிலை வகிக்கிறது. 2002ஆம் வெளிவந்த இந்தப் திரைப்படம் தனுஷின் முதல் படம் ஆகும். இதில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் ஷெரின் ஜோடியாக நடித்தார்.

Advertisement

ஆறு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குறித்த கதை தான் இந்தத் திரைப்படம். பள்ளியில் பயிலும் மூன்று ஆணும் மூன்று வெவ்வேறு குடும்ப பிரச்சனைகள் கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு ஓடி, பழைய நண்பர் ஒருவரின் உதவியால் ஒன்றாக வாழ்வர். இது தான் கதைக்களம். இதில் தனுஷ் மிலிட்டரி ஆபிசராக நடித்துள்ளார். 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

தனுஷ் – செல்வராகவன் கூட்டணிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. புதுப்பேட்டை, மயக்கம் என்ன திரைப்படங்கள் எல்லாம் கல்ட் கிளாசிக் வரிசையில் வைத்துள்ளனர் ரசிகர்கள். அடுத்ததாக இவர்கள் இருவரும் சேர்ந்து நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய மூன்று முக்கிய மற்றும் அனைவரும் எதிர்பார்த்த படங்களை உருவாக்க உள்ளனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top