சினிமா

தனுஷ் எடுக்கும் விஷப் பரீட்சை.. இது தேவை தானா? பெரிய தயாரிப்பு நிறுவனம் வேற

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரானவர் நடிகர் தனுஷ்.  ஆனால் இவர் தமிழில் மட்டுமல்ல இந்திய முழுவதுமே டாப் 10 ஆக்டர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்த பெருமைக்குரிய நடிகர் தனுஷ். இவர் நடிக்கும் எல்லா படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்து வருகிறது. ஒரு சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இவருடைய எதார்த்தமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் கூட்டம் என்றும் இருந்து வருகிறது.

தமிழ் சினிமாவை வென்றது மட்டுமல்லாமல் ஹாலிவுட் பாலிவுட் என்றும் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். அதிலும் ஹாலிவுட்டில் இவர் நடித்த கிரேமன் திரைப்படம் மூலம் ஹாலிவுட்டிலும் தனக்கென்று  ரசிகர்களை திரட்டினார். இதைத்தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் மித்ரான் ஆர் ஜவகர் இயக்கத்தில் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படமும் 100 கோடிக்கும் மேலே வசூலை பெற்றது. இப்படியான வசூலை பெற்றாலும் இந்தத் திரைப்படம் சற்று கலவையான விமர்சனத்தையே ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

நடிகர் தனுஷ் நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு பாடலாசிரியர் கதாசிரியர் இயக்குனர் என்ற பல கலைகளைக் கொண்ட கலைஞரும் ஆவார்.
இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்பொழுது நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் திரைப்படத்தையும் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் சன் பிக்சர் நிறுவனத்தில் நடிக்க இருக்கும் இந்த படம் அவருடைய இயக்கத்திலேயே இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

நடிகர் தனுஷ் இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு நடிகர் ராஜ்கிரன் ,நடிகை ரேவதி  மடோனா செபாஸ்டின் ,நடிகர் பிரசன்னா சாயா சிங் ஆகியோர் நடித்த பா பாண்டி என்று சொல்லப்படும் பவர் பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த படத்தில் அவரும் நடித்திருந்தார்.இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் காதல் கதையே ஒரு வித்தியாசமான கதைகளுக்குகாட்சிப்படுத்தியிருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய நடிப்புத்திறன் மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் அவர் ரசிகர்களை வென்றார்.

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிகர் தனுஷ் இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார் என்று ரசிகர்களும் அவர் இயக்க இருக்கும் இந்த படத்திற்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் நானே வருவேன் படத்திற்கு நடிகர் தனுஷ் தான் கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top